நியூ சரவணா ஸ்டார்ஸ் Legend சரவணன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியது.

சென்னை : 20 டிசம்பர் 2020

நியூ சரவணா ஸ்டார்ஸ் பிரமாண்மாய் வழங்கும், அறிமுக நாயகன் Legend சரவணன் தயாரித்து நடிக்கும் “புரொடக்க்ஷன் நம்பர்-1” Legend சரவணன் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடந்து வருகிறது.

நியூ சரவணா ஸ்டார்ஸ் உரிமையாளர் Legend சரவணன் அண்ணாச்சிக்கு திடீரென கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசை ஏற்படவே தனது நிறுவன விளம்பரங்களில் தானே நடிக்க ஆரம்பித்தார்.

அதனால் பலர் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

ஆனாலும் விடாது எல்லா விளம்பரங்களிலும் அவரே நடித்தார்.

இதையடுத்து தன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியாக ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

அந்த திரைப்படத்தை அவரை வைத்து விளம்பரப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கி வருகின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கு கவிப்பேரரசு
வைரமுத்து என முன்னணிக் கலைஞர்களை திரைப்படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

Legend சரவணனுக்கு ஜோடியாக அறிமுக நாயகி கீத்திகா திவாரி நடிக்கிறார்.

இவர்களுடன் முக்கிய வேடங்களில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பிராமையா, காளிவெங்கட், மயில்சாமி, லதா, கோவைசரளா, தேவிமகேஷ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து நடிக்க மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாகிறது.

இன்னொரு கதாநாயகியாக பிரபல நடிகை ஒருவரும் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, S.S.மூர்த்தி அரங்கம் அமைக்க ரூபன் எடிட்டிங் பொறுப்பை கவனிக்க, பட்டுக் கோட்டை பிரபாகர் வசனம் எழுத மக்கள் தொடர்பு நிகில் முருகன் கவனிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படபிடிப்பு சென்னை பொள்ளாச்சி ஹிமாலயாஸ் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கப்பட உள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்னர் பரபரப்பாக நடந்தது.

இந்த திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் பல கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.

பின்னர் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இப்போது படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளது.

படக்குழுவினர் பொள்ளாச்சியில் தற்போது Legend சரவணன் அண்ணாச்சி பங்கேற்கும் டூயட் பாடல்களைப் படமாக்கி வருகிறது.