சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த’ படப்பிடிப்பில் எட்டு பேருக்கு கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

சென்னை : 23 டிசம்பர் 2020

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படமான அண்ணாத்த திரைப்படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்தான் ‘அண்ணாத்த’.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பில் பணிபுரிந்தா எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் மற்றும் குஷ்பு மீனா கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த அண்ணாத்த திரைப்படத்தில் வெற்றி ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தலால் காரணமாக இந்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது டிசம்பர் 14-ம் தேதி முதல் படபிடிப்பு மீண்டும் தொடங்கியது.

இதில் பங்கேற்க சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா.

கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

அண்ணாத்த படப்பிடிப்பு நடந்த அதே ராமோஜி ராவ் பிலிம் சிட்டி மட்டும் அல்லாது பேகம் பேட் ஏர்போர்ட், கோட்டி பெண்கள் கல்லூரி, ஆர் அண்ட் பி பில்டிங், பெத்த ராவுல பள்ளி என்ற கிராமம் ஓ பேபி ஹவுஸ் , ஆர் டி சி கலாபவன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாறி மாறி படப்பிடிப்பு நடந்தது .

இந்த நிலையில் திரைப்படத்தில் பணியாற்றிய எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

இதனால் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் அவர் ஹைதராபாத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என சொல்லப்படுகிறது.