நடிகர் சூரி நடிப்பில் ‘கருடன்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர்!

நடிகர் சூரி நடிப்பில் ‘கருடன்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர்!

சென்னை 21 மே 2024 நடிகர் சூரி மற்றும் சசிகுமார் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கருடன்” திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளது.

இதில் நடிகர் சூரியின் நடிப்பு ரசிகர்களின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் கதையில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கருடன்’.

இந்த திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, நடிகர் தனுஷ் நடிப்பில் ‘கொடி’, ‘பட்டாசு’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

இந்த “கருடன்” திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும், சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த “கருடன்” திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் “கருடன்” திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் இன்று காலை வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி இருக்கு?

நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும்.

ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு” என்ற வசனத்துடன் தொடங்குகிறது.

இந்தக் “கருடன்” ட்ரெய்லர். சசிகுமார், உன்னி முகுந்தன் நல்ல நண்பர்கள். உன்னி முகுந்தனிடம் விசுவாசியாக இருக்கிறார் நடிகர் சூரி.

விசுவாசத்தின் முழு உருவமாக இருக்கும் நடிகர் சூரி, தன்னை வளர்த்த குடும்பத்துக்காக ‘சம்பவம்’ ஒன்றை செய்ய அதனால் பிரச்சினை எழுவதாக ட்ரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன.

ஆக்‌ஷனும், கதறலும், மிரட்டலுமாக முழு ட்ரெய்லரிலும் கவனம் பெறுகிறார் நடிகர் சூரி.

அவரின் வெறித்தனமான நடனம் ஒன்று ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என தெரிகிறது.

பின்னணியில் இசைக்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை தனித்து தெரிகிறது.

இவையெல்லாம் கோர்த்து உருவாகியிருக்கும் ட்ரெய்லர் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இந்த “கருடன்” திரைப்படம்  இம்மாதம் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவர உள்ளது.