கட்டா குஸ்தி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 4.5/5

நடிகர் நடிகைகள் :- விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, ஹரிஷ் பேராடி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- செல்லா அய்யாவு.

ஒளிப்பதிவு :- ரிச்சர்ட் எம் நாதன்.

படத்தொகுப்பு :- பிரசன்னா ஜி.கே.

இசை :- ஜஸ்டின் பிரபாகரன்.

தயாரிப்பு நிறுவனம் :- விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் & ஆர்டி டீம்வொர்க்ஸ.

தயாரிப்பாளர் :- விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா.

ரேட்டிங் :- 4.5 / 5

ஆண்களுக்குப் பெண்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்ற கதையை வைத்து நகைச்சுவையுடன் திரைக்கதை அமைப்பு நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து இந்த கட்டா குஸ்தி திரைப்படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு மிகவும் அருமையாக இயக்கியிருக்கிறார்.

இந்த கட்டா குஸ்தி திரைப்படத்தின் டிரெய்லர் திரைப்பட ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து திரைப்படத்தின் மீதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

கேரளா மாநிலத்தில் மிகவும் பிரபலமான கட்டா குஸ்தி விளையாட்டில் சிறந்த வீராக முனிஸ்காந்த் மாற முயற்சிக்கிறார்.

ஆனால் இதற்கு இவருடைய உடல் ஒத்துழைக்காததால் குஸ்தி கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது.

தனது சித்தப்பா முனிஸ்காந்த் செய்யும் பயற்சியையும் தனது சித்தப்பா சென்று வரும் குஸ்தி போட்டிகளையும் சிறு வயதிலிருந்து கூர்ந்து கவனித்து வருகிறார் கதாநாயகி ஐஷ்வர்யா லக்ஷ்மி

அதன்பின் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி ஈடுபாடால் கட்டா குஸ்தியில் தேர்ந்த வீரராக மாறுகிறார்.

சிறு வயது முதல் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பையை வெல்லும் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி பல வருடங்களாக திருமணமாகாமல் இருக்கிறது.

இதனால் இவரை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை அனைவரும் பெண் கட்டா குஸ்தி வீரர் என்பதால் தட்டி கழிக்கின்றனர்.

கட்டா குஸ்தி வீரராக இருப்பதாலேயே அவருக்கான மாப்பிள்ளை கைகூடாமல் விலகி செல்கின்றன.

தனது மகள் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமிக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து வைக்க வேண்டும் என தந்தை இருந்து வருகிறார்

இதுஒருபுறம் இருக்க மறுபுறம் தனக்கு வரப்போகும் மனைவி தன்னைவிட படிப்பில் குறைந்தவளாகவும் தலைமுடி மிக நீளமாகவும் இருக்க வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் கதாநாயகன் விஷ்ணு விஷால் நிபந்தனைக்கு உட்பட்ட பெண்களை தேடி வருகிறார்.

எதிர்ப்பாராத விதமாக முனிஸ்காந்த், கதாநாயகன் விஷ்ணு விஷாலை சந்திக்க, தனது அண்ணன் மகளை நீங்கள் கூறும் நிபந்தனைக்கு உட்பட்டு இருக்கிறார் என்று பொய் சொல்லி அவருக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு சில பொய்களைச் சொல்லி கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமிக்கும் தமிழகத்தை சேர்ந்த கதாநாயகன் விஷ்ணு விஷாலை திருமணம் நடித்து வைக்கப்படுகிறது..

தன் கணவருக்கு தான் படித்தவன் ஒரு குஸ்தி வீரர் என விஷயம் தெரியாமல் வாழ்ந்து வரும் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி ஒரு பிரச்சனையில் தன் கணவரை கொலை செய்ய முயற்சிக்கும் வில்லனுடைய அடியாட்களை, கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி அடித்து தும்சம் செய்து விடுகிறார்.

சுமூகமாக செல்லும் திருமண வாழ்க்கையில் பொய்கள் வெளிச்சத்திற்கு வந்து பூகம்பமாய் கிளம்புகிறது.

அதன்பின்னர் உண்மை தெரியவர, தனது மனைவி கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி அவரின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுகிறார்.

இதனை தொடர்ந்து கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் குஸ்தியை கையில் எடுத்து ஒரு போட்டியில் சேருகிறார்.

கணவர் மனைவி குஸ்தி என ஒரு போட்டி நடத்தப்படுகிறது அந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கு குஸ்தி தெரியாத கதாநாயகன் விஷ்ணு விஷால் தனது மனைவி கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமியை விழுத்துவதற்கு, தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.

அந்த போட்டியில் கதாநாயகன் விஷ்ணு விஷால் கலந்துக் கொள்கிறார்.

இறுதியில் அவர் கலந்து கொண்ட கட்டா குஸ்தி போட்டியில் தன் மனைவியை வென்றாரா? வெல்லவில்லையா? கதாநாயகன் விஷ்ணு விஷால் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? என்பதுதான் கட்டா குஸ்தி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கட்டா குஸ்தி திரைப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

கபடி வீரராகவும், கட்டா குஸ்தி வீரராகவும் என பல பரிணாமங்களில் வரும் விஷ்ணு விஷால் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது மனைவியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிக்கும் இடங்களில் அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.

படிச்சவ அதிகாரம் பண்ணுவா படிக்காதவதான் அடங்கி போவா’, ‘நீளமான முடியில்லன்னா அவ பொண்ணுல்ல; பையன்’ போன்ற பழமைவாத வசனங்களை பேசும் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் கதாநாயகன் விஷ்ணு விஷால். தனக்கு கிடைத்த இடங்களில் நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்கிறார்.

சண்டைக்காட்சி மற்றும் காமெடி காட்சிகள் என அனைத்திலும் கைத்தட்டல் பெறுகிறார்.

இந்த கட்டா குஸ்தி திரைப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார்.

கட்டா குஸ்தி வீரராக வரும் கதாநாயகி ஐஷ்வர்யா லக்ஷ்மி அவருடைய பணியனை மிக சிறப்பாக செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு வரும் காட்சிகளில் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார்.

அவருடைய அதிரடி சண்டை காட்சிகளில் சினிமா விட்டு அரசியலுக்கு சென்ற நடிகை விஜயசாந்தி போல் அதிரடி சண்டைக் காட்சிகளில் மிகவும் அற்புதமாக கலக்கியிருக்கிறார்.

முனிஸ்காந்த், கருணாஸ், காளி வெங்கட், ரெடிங் கிங்ஸ்லி ஹரிஷ் பேராடி என அனைவரும் அவர்களுடைய பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு திரைப்படத்தை மெருகேற்றியுள்ளது.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

காமெடி, ஆக்ஷன், எமோஷ்னல் என அனைத்தையும் கொடுத்து ரசிகர்களை கவர நினைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு.

முதல் பாதியில் முழுக்க கலகலப்பாக கொண்டு சென்று இரண்டாம் பாதியில் உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு.

மொத்தத்தில் கட்டா குஸ்தி திரைப்படத்திதை குடும்பத்துடன்  பார்த்து சிரித்து மகிழலாம்.