ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில்  புதிய திரைப்படம் ‘ஐங்கரன்’ 21-ஆம் தேதி  கலர்ஸ் தமிழ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பு!!

சென்னை 19 ஆகஸ்ட் 2022 ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில்  புதிய திரைப்படம் ‘ஐங்கரன்’ 21-ஆம் தேதி  கலர்ஸ் தமிழ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பு!!

ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கும்மாலை 5 மணிக்கும் ஒளிபரப்பாகிறது

சென்னை 19 ஆகஸ்ட் 2022 அர்த்தமுள்ள பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அறிவியல் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பை மையமாகக் கொண்ட புதிய திரைப்படம் ஐங்கரன் வரும் 21-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணி மற்றும் 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

தன்னை அடையாளம் காணப் போராடும் ஒரு கண்டு பிடிப்பாளரின் வாழ்க்கையைச் சுற்றி இந்தப் படம் சுழல்கிறது.

அத்துடன் இறைச்சி மோசடி கும்பலிடம் இருந்து மக்களை காப்பாற்றுவது குறித்தும் எடுத்துக் கூறுகிறது.

இந்த படத்தை ரவி அரசு இயக்கி உள்ளார்.

இந்தப்படம் கடந்த மே மாதம் திரைக்கு வந்தது.

இந்த படத்தில் ஹீரோவாக ஜிவி பிரகாஷ் மற்றும் ஹீரோயினாக மகிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் அவர்களுடன் நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன் மற்றும் ஜி. மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படம் கதாநாயகன் மதியின் வாழ்க்கையை சுற்றி வருகிறது.

அவரது கண்டுபிடிப்புகளால் அவர் எப்படி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் என்பதும் அதில் இருந்து அவர் எப்படி விடுபடுகிறார் என்பதுமே இப்படத்தின் கதையாகும்.

மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டதாரியான மதி பல்வேறு எந்திரங்களையும், கண்டு பிடிப்புகளையும் உருவாக்கி, அவற்றுக்கான அரசாங்க காப்புரிமையைப் பெற முயற்சிக்கிறார்.

ஆனால் அது பலனில்லாமல் போய்விட்டது.

ஒரு நாள் அவர் ஒரு பணக்கார தொழிலதிபரின் கோழிப் பண்ணைக்கு சென்று அங்கு அவர் கோழி இறைச்சியில் ஸ்டெராய்டுகளை சேர்ப்பதை வீடியோவாக பதிவு செய்து அதை ஆன்லைனில் வெளியிடுகிறார்.

இதேபோல் அவர் சுரங்க பாதை ஒன்றில் மிகவும் ஆபத்தான நகை திருடும் கும்பலையும் சந்திக்கிறார்.

அத்துடன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.

மதி தனது கண்டுபிடிப்புகள் மூலம் இவற்றை எல்லாம் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே இப்படத்தின் மீதி கதையாகும்.

இந்த படம் குறித்து இதன் இயக்குனர் ரவி அரசு கூறுகையில்,

கலர்ஸ் தமிழ் போன்ற ஒரு முக்கிய சேனலில் எனது ஐங்கரன் திரைப்படம் ஒளிபரப்பாவது குறித்து நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.

ஊழல் மற்றும் கலப்படம் குறித்த ஒரு சமூக செய்தியை தனித்துவமான முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே இப்படத்தின் முக்கிய அம்சம் ஆகும்.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் சக நடிகர்கள் இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை பார்வையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பார்த்து மகிழ்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

இது குறித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் கூறுகையில்,

இந்தப் படம் வெற்றி பெற அனைவரும் அரும்பணியாற்றி உள்ளோம்.

முதன்முறையாக நான் ஒரு கண்டுபிடிப்பாளராக நடிக்கிறேன், நான் முழு ஈடுபாட்டுடன் இந்த படத்தில் நடித்துள்ளேன்.

கெட்டவர்களை எதிர்த்து நின்று சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற மதி கதாபாத்திரம் நம் அனைவரின் முகமாகவும் இருக்கிறது.

இந்த படத்தை பார்வையாளர்கள் நிச்சயம் ரசித்து பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

இந்த திரைப்படம் வரும் 21-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி மற்றும் 5 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.