சாதனை படைக்கும் பிரசாந்த் வர்மாவின் பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ டீசர்.!
சென்னை 05 டிசம்பர் 2022 சாதனை படைக்கும் பிரசாந்த் வர்மாவின் பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ டீசர்.!
படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்திய திரைப்படமான ‘ ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் சாதனையை படைத்திருக்கிறது.
படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘ஹனு-மேன்’.
இளம் நட்சத்திரம் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், பான் இந்திய திரைப்படமாக தயாராகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் தமிழ் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது.
படத்தின் டீசர் தேசம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
டீசரில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும் வசீகரத்துடன் இருந்தது.
டீசரில் ஹனு-மேனின் அறிமுகம் அனைவரையும் கவர்ந்தது. இதற்காக இயக்குநர் பிரசாத் வர்மாவிற்கு பிரத்யேகமான பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இளம் நட்சத்திரமான தேஜா சஜ்ஜா சூப்பர் ஹீரோவாக அவருடைய தோற்றத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனிடையே ‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியான குறுகிய காலக்கட்டத்தில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
அதனுடன் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் ‘லைக்ஸு’ம் வழங்கப்பட்டிருக்கிறது.
இது திரையுலகில் சாதனையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இளம் நட்சத்திரம் தேஜா சஜ்ஜா ‘ஹனுமான் முன் கையில் சூலாயுதத்துடன் நிற்பது போன்ற போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டீசரில் இடம் பெற்றிருக்கும் கிராபிக்ஸ் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது என்பதனை நிரூபித்திருக்கிறது.
படக்குழுவினர் அண்மையில் அயோத்திக்குச் சென்று ஸ்ரீராமனின் ஆசிர்வாதத்தை பெற்று, அடுத்த கட்ட விளம்பரப் பணியில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார்கள்.
‘ஹனு -மேன்’ திரைப்படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரவ் ஹரி -அனுதீப் தேவ்- கிருஷ்ணா சௌரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
கலை இயக்கத்தை ஸ்ரீ நாகேந்திர தாங்கலா வடிவமைத்திருக்கிறார்.
பிரைம் ஷோ எண்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார்.
குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில் ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியிட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Almighty has conquered millions of hearts❤️#HanuManTeaser crosses
50 MILLION+ VIEWS with 1 MILLION LIKES on Youtube🤩– https://t.co/AxWcx3P0bw
#HanuMan
A @PrasanthVarma@tejasajja123@Actor_Amritha @varusarath5 @Niran_Reddy @Chaitanyaniran @Primeshowtweets @proyuvraaj pic.twitter.com/TSYLDf4FHq— 𝘼 𝙈𝙊𝙑𝙄𝙀 𝙒𝙄𝙉𝙂𝙕 (@amoviewingz) December 5, 2022