இடி மின்னல் காதல் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சிபி, பவ்ய திரிகா, யாஸ்மின் பொன்னப்பா, ராதா ரவி, பாலாஜி சக்திவேல், ஜெகன், ஜெயதித்யா, வின்சென்ட் நகுல், மனோஜ் முல்லத், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாலாஜி மாதவன்.

ஒளிப்பதிவாளர் :- ஜெயச்சந்தர் பின்னம்நேனி.

படத்தொகுப்பாளர் :- ஆண்டனி.

இசையமைப்பாளர் :- சாம் சிஎஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- பாவகி எண்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர்கள் :- ஜெயச்சந்தர் பின்னம்நேனி, பாலாஜி மாதவன்.

ஒரு சில தினங்களில் அமெரிக்காவுக்கு செல்ல இருக்கும் கதாநாயகன் சிபி, அதற்கு முன்பாக தனது காதலி கதாநாயகி பவ்யா ட்ரிகாவுடன் காரில் ஜாலியாக வலம் வர, திடீரென்று ரோட்டின் குறுக்கே வருபவர் மீது மோதி விட விபத்து ஒன்று நடக்கிறது

அந்த விபத்தில் அந்த நபர் அந்த இடத்திலேயே   இறந்து விடுகிறார்.

தன்னை அறியாமல் நடந்த விபத்து என்றாலும் தன்னால் ஒரு உயிர் தன்னால் நிகழ்ந்த விபத்தினால் பலியானதை நினைத்து கதாநாயகன் சிபி மனதளவில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்.

கதாநாயகன் சிபி அமெரிக்கா செல்வதற்கான அனைத்து உதவிகளையும் காதலியான கதாநாயகி பவ்யா ட்ரிகா செய்து வருகிறார்.

இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்தவரின்  மகன் ஜெயதித்யா தனது தந்தை இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்.

விபத்தில் உயிரிழந்தவரின்  மகன் ஜெயதித்யாவிற்க்கு பாலியல் தொழிலாளியான யாஷ்மின் பொன்னப்பா ஆதரவளிக்க, விபத்தில் உயிரிழந்தவர் வாங்கிய கடனுக்காக அவருடைய மகன் ஜெயதித்யாவை மிகப்பெரிய தாதாவான வின்செண்ட் நகுல் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார்.

இந்த இரண்டு வெவ்வேறு கதைகளும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்க, தன்னால் விபத்தில் உயிரிழந்தவரின் மகன்தான் ஜெயதித்யா என்பது தெரியாமலேயே அவரை காப்பாற்றும் முயற்சியில் கதாநாயகன் சிபி பயணப்படுகிறார்.

தனது தந்தை விபத்தினால் உயிரிழந்ததற்கு காரணம் கதாநாயகன் சிபிதான் என்பதை தெரிந்துக்கொள்ளும் சிறுவன் ஜெயதித்யா, கதாநாயகன் சிபி மீது பழி தீர்க்க கொலைவெறியில் இருக்கிறார்.

தனது தந்தை உயிரிழப்பிற்கு காரணமான கதாநாயகன் சிபியை சிறுவன் ஜெயதித்யா பழிதீர்த்தாரா? பழிதீர்க்கவில்லையா?

தந்தை கடனுக்காக அவருடைய மகனான ஜெயதித்யாவை தாதாவான வின்செண்ட் நகுல் அழைத்துச் சென்றாரா? செல்லவில்லையா? என்பதுதான் இந்த  ’இடி மின்னல் காதல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த இடி மின்னல் காதல் திரைப்படத்தில் கதாநாயகனாக சிபி நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சிபி, ஆக்‌ஷன் கதாநாயகனுக்கான அனைத்து தகுதிகளும் கொண்டவராக திகழ்கிறார்.

ஆனால், கிளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சியில் திரைப்படத்தின் கதாநாயகனை அடிவாங்க வைத்திருப்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவருடைய நடிப்பு வசன உச்சரிப்பு என அனைத்தும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இந்த இடி மின்னல் காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக பவ்யா ட்ரிகா நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா, மிக அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து மற்றும் அழகோடு ரசிகர்களை கவர்கிறார்.

கமர்ஷியல் கதாநாயகியாக அல்லாமல் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தனது கதாபாத்திரத்தை நியாயம் சேர்க்கும் வகையில் மிக அருமையாக  நடித்திருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் வின்செண்ட் நகுல், ஆரம்பத்தில் ஓவர் பில்டப்புடன் அறிமுகமானாலும், அடுத்தடுத்த காட்சிகளில் கொடுத்த பில்டப்புக்கு  ஏற்றவாறு நடித்திருக்கிறார்.

சிறுவன் ஜெயதித்யா தனது தந்தை இறந்த துக்கத்தை தாங்காமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு தடுமாறும் காட்சிகள் அனைத்திலும் அருமையாக நடித்திருக்கிறார்.

அதிலும், தனது தந்தையின் உயிரிழப்பிற்கு கதாநாயகன் சிபி தான் காரணம் என்றதுமே அவர் மீது கொலை வெறிக்கொண்டு அவர் வெளிப்படுத்தும் அனைத்து எக்ஸ்பிரசன்கள் கடை பத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாஷ்மின் பொன்னப்பா கொடுத்த கதாபாத்திரத்தை குறையில்லாமல் மிக அருமையாக நடித்துள்ளார்.

கிறிஸ்தவ பாதிரியராக நடித்திருக்கும் ராதாரவி மற்றும் காவல்துறையை சேர்ந்த காவலராக  நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் இருவரும் அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு பெரிய அளவில் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

கதாநாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஜெகன், காமெடி நடிகராக அல்லாமல் குணச்சித்திர நடிகராக மிளிர முயற்சி செய்திருக்கிறார்.

சிறுவன் ஜெயதித்யாவை தந்தை கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் மனோஜ் முல்லத், தனது ஊதாரித்தனத்தால் சொத்து, குடும்பம் என அனைத்தையும் இழந்து தவிக்கும் கதாபாத்திரத்தில் மிக கச்சிதமாக  பொருந்தி மிக அருமையாக நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஜெயச்சந்தர் பின்னம்நேனியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு மிக அருமையாக பயணித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பின்னணி இசை வழக்கத்தை விட குறைவான சத்தத்தில் அளவாகவும் மிக அருமையாகவும் பயணத்திருக்கிறார்.

அறியாமல் செய்த தவறுக்கு கதாநாயகன் பரிகாரம் செய்வதாக நினைத்து, விபத்தில் உயிரிழந்தவரின் மகன் தான் அந்த சிறுவன் என்று தெரியாமலேயே அவனை காப்பாற்ற நினைப்பது மற்றும் இரண்டு கதைகளை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைத்திருப்பது திரைப்படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.

எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்து நடக்கும் கதையை வைத்துக்கொண்டு, வித்தியாசமான திரை கதையை அமைத்து  பலவிதமான கதாபாத்திரங்களின் வடிவமைப்போடு  திரைப்படத்தை மிக அருமையாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் பாலாஜி மாதவன்

மொத்தத்தில், இந்த ‘இடி மின்னல் காதல்’ திரைப்படம் பார்க்கலாம்.