உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிபிற்காக தாய்வான் சென்ற இயக்குனர் ஷங்கர்.!
உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிபிற்காக தாய்வான் சென்ற இயக்குனர் ஷங்கர்.!
சென்னை 03 ஏப்ரல் 2023 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு நடந்து வருகிறது.
இந்த இந்தியன் 2 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இரண்டு நிறுவனமும் இணைந்து மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.
‘இந்தியன் 2’ திரைப்படம் எட்டு நாட்கள் படப்பிடிப்பிற்காக தாய்வான் சென்ற படக்குழுவினர், அதன் பிறகு ஒரு மாத கால அட்டவணைக்காக தென்னாப்பிரிக்கா படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.
தாய்வான் செல்லும் விமானத்தின் புகைப்படத்தை கமல்ஹாசன் பகிர்ந்துள்ள செய்தியை நாம் ஏற்கனவே அறிந்திருப்போம்.
இப்போது இயக்குனர் ஷங்கர், பின்னணியில் ஒரு கவர்ச்சியான சீன கட்டிட அமைப்புடன், ஸ்கிரிப்ட் கையில் வைத்து, படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் இருக்கும் ஒரு அற்புதமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியன் 2′ திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், கிஷோர், ஜார்ஜ் மரியன். மனோபாலா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு ரத்னவேலு மற்றும் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு கவனிக்கிறார்.