கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மார்ச் 31ம் தேதி வரை அனைத்து ரெயில் சேவைகளும் முற்றிலும் ரத்து இன்டியன் ரயில்வே அறிவிப்பு.

பல நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தமிழகத்தில் தடுக்க மார்ச் மாதம் 31 ம் தேதி வரை ரெயில் சேவை அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்படும். என இன்டியன் ரெயில்வே அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க நாடு முழுவதும் இன்று ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு உத்தரவு ஒட்டி நமது நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் நோய் அறிகுறியுடன் ரெயில்களில் பயணம் செய்பவர்களின் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இதனால் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என அச்சம் நிலவி வரும் நிலையில் அனைத்து ரெயில் சேவைகளும் நிறுத்தி வைக்கலாமென இன்டியன் ரெயில்வே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரஸை சமூக தொற்றாக மாறுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கையில் ஒன்றாக நமது நாடு முழுவதும் இன்று முதல் மார்ச் 31ஆம் தேதி வரை பயணிகள் ரெயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக
இன்டியன் ரெயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.