இரும்பன் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.25 /5.
நடிகர் நடிகைகள் :- ஜூனியர் எம.ஜி.ஆர், யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா, ஷாஜி சவுத்ரி சென்ட்ராயன், ரக்சிதா, அஸ்வினி, மணிமாறன், சம்பத்ராம், கயல் தேவராஜ் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கீரா.
ஒளிப்பதிவு :- லெனின் பாலாஜி.
படத்தொகுப்பு :- எஸ்பி அஹமது.
இசை :- ஸ்ரீகாந்த் தேவா.
தயாரிப்பு நிறுவனம் :– லெமுரியா மூவிஸ்.
தயாரிப்பாளர்:- தமிழ் பாலா & ஆர்.வினோத்குமார்.
ரேட்டிங் :- 2.25 / 5.
மறைந்த புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மனைவி ஜானகி வழி பேரன் ஜூனியர் எம் ஜி ஆர் இரும்பன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் என்றால் குறவர் இன மக்களுக்கு உயிர்.
அந்த இனத்தை சேர்ந்த கதாபாத்திரத்தில் ஜூனியர் எம் ஜி ஆர் நடித்திருப்பது ஏகப் பொருத்தமாக உள்ளது.
நரிக்குறவ இனத்தைச் சேர்ந்தவர் கதாநாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர்
சேட்டு குடும்பத்தைச் சேர்ந்தவர் கதாநாயகி ஐஸ்வர்யா தத்தா கதாநாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆரும் கதாநாயகி ஐஸ்வர்யா தத்தாவும் இருவரும் நட்பாக பழகி வருகிறார்கள்.
கதாநாயகி ஐஸ்வர்யா தத்தாவின் மீது கதாநாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆருக்கு நட்பு காதலாக மாறுகிறது
கதாநாயகி ஐஸ்வர்யா தத்தா தனது வாழ்க்கையில் துறவியாக வேண்டும் என்று முடிவு செய்து ஜெயின் ஆசிரமத்தில் சேர்ந்து விடுகிறார்.
கதாநாயகி ஐஸ்வர்யா தத்தா துறவி ஆகப் போவதை விரும்பாத கதாநாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர் அவரை ஜெயின் ஆசிரமத்தில் இருந்து நண்பர்களுடன் சேர்ந்து கதாநாயகி ஐஸ்வர்யா தத்தாவை கடத்தி விடுகிறார்.
அதன் பின் என்ன நடந்தது , இவர்களின் இருவரது காதல் கைகூடியதா? இல்லையா?
கதாநாயகி ஐஸ்வர்யா தத்தா துறவி ஆனாரா? ஆகவில்லையா? என்பதுதான் இந்த இடும்பன் திரைப்படத்தின் மீதி கதை.
இந்த இரும்பன் திரைப்படத்தில் ஜுனியர் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இந்த இரும்பல் திரைப்படத்தில் ஆபீஸ் கதாபாத்திரத்தில் ஏற்றவாறு அருமையாக இருக்கிறது.
தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, ஆக்சன், நடனம் என அனைத்து தனது திறமையை காண்பித்துள்ளார்.
ஒவ்வொரு காட்சிகளிலும் அவருடைய நடிப்பில் சற்று கவனம் செலுத்திருக்கலாம்.
அவர் என்ன வேண்டுமானாலும் நடிக்கலாம் இப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம்
நல்ல கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
காவியத்தலைவன் காலத்தால் அழிக்க முடியாத ஒரே பொக்கிஷம் புரட்சித்தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் பெயருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
இந்த இரும்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கிறார்.
நடிப்பின் மீது கவனத்தை காட்டாமல் குட்டை பாவாடை மீது கவனத்தை காட்டியிருக்கிறார் கதாநாயகி ஐஸ்வர்யா தத்தா.
யோகி பாபுவின் காமெடி மனதுக்கு நிறைவாகவும் நம்மை சிரிக்க வைக்கிறது.
வாய் அசைவு இல்லாத இடங்களிலும் யோகி பாபு வசனங்கள் பேசி இருக்கிறார் அதை கொஞ்சம் தவிர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
செண்ட்ராயன் தன்னால் முடிந்தவரை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.
கதாநாயகி தந்தையாக வரும் ஷாஜி சவுத்ரி, காவல்துறை அதிகாரியாக வரும் சம்பத்ராம், கதாநாயகனின் தந்தையாக வரும் யோகி தேவராஜ், மணிமாறன், அஸ்வினி என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்களும் அனைவரும் அளவான நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் லெனின் பாலாஜியின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகள் கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை கவனம் ஈர்க்கும் வகையிலும் ஒளிப்பதிவு இருக்கிறது.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் இனிமையாகவும், துள்ளல் ரகமாகவும் இருக்கிறது.
”நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி…” பாடலின் ரீமிக்ஸ் திரையரங்கையே ஆட்டம் போட வைப்பது உறுதி.
பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் கீரா, நரிக்குறவர்கள் பற்றிய திரைப்படமாக எடுக்க முயற்சித்தி பிறகு கதாநாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆருக்கான திரைப்படமாக இயக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘இரும்பன்’ திரைப்படம் ஒகே.