சூப்பர் ஸ்டாரின் 170ஆவது திரைப்படத்தின் இயக்குனர் இவரா?

சென்னை 26 ஆகஸ்ட் 2022 சூப்பர் ஸ்டாரின் 170ஆவது திரைப்படத்தின் இயக்குனர் இவரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்
170வது திரைப்படத்தின் இயக்குனர் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஜினியின் 169வது திரைப்படம் குறித்து பல தகவல்கள் வெளிவந்தன.

இதனை அடுத்து நடிகர் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார்தான் ரஜினியின் 169வது திரைப்படத்தை இயக்குவார் என்று திரைப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

அதனால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஜெயிலில்தான் படமாக்கப்பட உள்ளது.

இதையடுத்து இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினியின் 170வது திரைப்படத்தின் இயக்குனர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்தத் திரைப்படத்தின் இயக்குனராக இளம் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘டான்’ திரைப்படத்தை இயக்கியவர்தான் சிபி சக்ரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.