சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் சுமாராக உள்ளது என தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் சுமாராக உள்ளது என தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.!

சென்னை 09 ஆகஸ்ட் 2023 தமிழ் திரைப்பட உலகில் மட்டுமின்றி இந்திய திரைப்பட உலகில் முடி சூடா மன்னனாக விளங்கும் அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து ரசிகர்கள் மனதிலும் நிரந்தரமாக சூப்பர் ஸ்டாராக இடம் பெற்றிருக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான்.

இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், திரைப்படம் நாளை நாளை வெளியாக இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம்’ மற்றும் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் த.செ.ஞானவேல் திரைப்படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ரஜினியின் 169-வது திரைப்படமான ‘ஜெயிலர் தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் ஷிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

கெஸ்ட் ரோலில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லால் நடித்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் எகிற வைத்தது.

திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இந்த ஜெயிலர் திரைப்படத்தை பார்த்த வெளிநாட்டில் உள்ள தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ட்விட்டரில் ஜெயிலர் திரைப்படம் நன்றாக இல்லை சுமாராக உள்ளது என் குறிப்பிட்டதுடன் முதல் விமர்சனம் 5-க்கு 2 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே கொடுத்துள்ளார்.