ஜெய் விஜயம் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 1.5/5.

நடிகர் & நடிகைகள்:- ஜெய் ஆகாஷ், அக்ஷயா கந்தமுதன், அட்சயா ரே, ஏசிபி ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், திவாகர், டாக்டர் சரவணன், பாஸ்கர், சக்திவேல், ஆர் ராம்குமார், கிக்கி வாலஸ், ஹரிஷ், லாவண்யா, விஜி கந்தமுதன், கிருஷ்ணன், ஜெயபிரசாத், மணிகண்டன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜெயசதீஷன் நாகேஸ்வரன்.

ஒளிப்பதிவாளர் :- பால் பாண்டி.

படத்தொகுப்பாளர் :- ஏ.சி. மணிகண்டன்.

இசையமைப்பாளர் :- எஸ்.சதீஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- ஜெய் ஆகாஷ்.

ரேட்டிங் :- 1.5 /5.

கதாநாயகன் ஜெய் ஆகாஷ், மற்றும் அவருடைய மனைவி கதாநாயகி அக்‌ஷயா கந்தமுதன், தங்கை அட்சயா ரே, தந்தை ஏசிபி ராஜேந்திரன், ஆகியோர் ஒரு புது வீட்டிற்கு குடியேறுகிறார்.

கதாநாயகன் ஜெய் ஆகாஷ் ’ஹலுசினேஷன்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதனால், கதாநாயகன் ஜெய் ஆகாஷ் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக கற்பனை செய்துக்கொள்வார்.

கதாநாயகன் ஜெய் ஆகாஷ் அவருடைய குடும்பத்தினர் ஹலுசினேஷன்’ என்ற நோய் இருப்பதால் பத்திரமாக பார்த்துக் கொள்வதோடு, அவரை வெளியே எங்கும் விடாமலும் பார்த்துக் கொள்கிறார்.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் கதாநாயகன் ஜெய் ஆகாஷ் மனைவி கதாநாயகி அக்‌ஷயா கந்தமுதன்,, தங்கை, அட்சயா ரே, தந்தை ஏசிபி ராஜேந்திரன் என அனைவரும் பொய்யாக நடிக்கிறார்கள் என உண்மை தெரிய வருவதோடு, தற்போதைய காலக்கட்டத்தில் இருந்து பத்து வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்வதாக கதாநாயகன் ஜெய் ஆகாஷ் நம்ப வைத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

மனைவி கதாநாயகி அக்‌ஷயா கந்தமுதன்,, தங்கை, அட்சயா ரே, தந்தை ஏசிபி ராஜேந்திரன் அவர்கள் அப்படி நடிப்பதற்கு காரணம் என்ன கதாநாயகன் ஜெய் ஆகாஷ்க்கு ’ஹலுசினேஷன்’ என்ற நோய் எப்படி வந்தது.

கதாநாயகன் ஜெய் ஆகாஷ் அந்த நோயிலிருந்து விடுபட்டாரா? விடுபடவில்லை? என்பதுதான் இந்த ‘ஜெய் விஜயம்’ திரைப்படத்தின் மீதிகதை.

இந்த ஜெய் விஜயம் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெய் ஆகாஷ், குழப்பம் மிக்க ஒரு வாழ்க்கையை வாழக்கூடிய மனிதராக மிக சுமாரான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் கதாநாயகன் ஜெய் ஆகாஷ் நடிப்பு சுமாராகத்தான் இருக்கிறது.

இந்த ஜெய் விஜயம் திரைப்படத்தில் கதாநாயகியாக அக்‌ஷயா கந்தமுதன் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அக்‌ஷயா கந்தமுதன், மிகவும் அழகாக இருப்பதோடு, ஹோம்லியான லுக்கில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவர்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அக்‌ஷயா கந்தமுதன், கொடுத்த கதாபாத்திரத்தை குறைவில்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஜெய் ஆகாஷ் தங்கையாக வரும் அட்சயா ரே தந்தையாக வரும் ஏசிபி ராஜேந்திரன், என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பெரும்பாலும் புதுமுகங்களாக இருந்தாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பால் பாண்டியின் ஒளிப்பதிவு மொத்தத்தில் சுமாராக இருக்கிறது.

மிகவும் மட்டமான ஒளிப்பதிவை இந்த சுமாரான திரைப்படத்தை காட்சிப்படுத்தியிருப்பது திரைப்படம் முழுவதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இசையமைப்பாளர் எஸ். சதீஷ்குமாரின் இசையில் பாடல்களும் அனைத்தும் வேலை தெரியாத இசையமைப்பாளர் இசை அமைத்தது போல் உள்ளது.

இசையமைப்பாளர் எஸ். சதீஷ்குமாரின் பின்னணி இசையும் அப்படித்தான் உள்ளது.

இயக்குநர் ஜெயசதீஷ்வரன் நாகேஸ்வரன் கதையை எடுத்துக் கொண்டு மற்றும் திரைக்கதையில் யூகிக்க முடியாத ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மிக சுவாரஸ்யமான திரைக்கதையோடு பயணிக்க வைத்திருக்கிறார்.

திரைப்படத்தின் மேக்கிங்கில் பலவகையான குறைகள் இருக்கிறது.

இந்தத் திரைப்படம் சிறு குழந்தைகள் சொப்பு சாமான் வைத்து எடுத்தது போல் உள்ளது.

இந்த திரைப்படத்தில் கதை திரைக்கதை அருமையாக இருந்தாலும் மற்ற நடிகர்கள் ஒலிப்பதிவு திரைப்படத்தில் டப்பிங் எஃபெக்ட் அனைத்தும் குறையாக உள்ளது.

இப்படி எல்லாம் திரைப்படம் வந்தால் தமிழ் திரைப்பட உலகம் கோடம்பாக்கத்தை தாண்டுமா என்றால் கேள்விக்குறி தான்.

மொத்தத்தில் இந்த ஜெய் விஜயம் திரைப்படம் திரைப்பட ரசிகர்கள் கொண்டாடும் அளவில் இல்லை என்பது தான் உண்மை.