ஜம்பு மஹாரிஷி திரைப்படத்தை பார்த்து பாராட்டும் சம்பு சமய பேரவை.!!

ஜம்பு மஹாரிஷி திரைப்படத்தை பார்த்து பாராட்டும் சம்பு சமய பேரவை.!!

சென்னை 29 ஏப்ரல் 2023 இன்று திரைப்பட தயாரிப்பாளர் & இயக்குநர், திரு.பாலாஜி அவர்கள் திரைக்கதை, வசனம் எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜம்பு மஹாரிஷி திரைப்படத்தை வில்லிவாக்கம் AGS திரையரங்கில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த சமூதாய பிரமுகர்கள் பார்த்தனர்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, விவசாயம் செய்து வளர்ந்து, விவசாயிகள் படும் கஷ்டங்களை அறிந்து, விவசாயத்தின் அருமையை விளக்கும் வகையில் படம் அமைந்ததுள்ளது.

இந்திய விவசாயத்தையும் மண்வளத்தையும் கெடுக்கும் வகையிலும் இந்திய பொருளாதாரம் மற்றும் மனிதவளத்தை அழிக்கும் வகையிலும் அன்னியநாட்டு சக்திகளோடு சேர்ந்து சதிசெய்யும், சதிகாரர்களை அழிக்கும் விதமாக படம் அமைந்துள்ளது.

இயக்குநர் அவர்கள் விவசாயத்தின்மீது உள்ள பற்றோடு, தேசப்பற்றையும் சேர்த்து காண்பித்துள்ளார்.

இத்தோடு தான் பிறந்த சமூதாயத்தின் புராணபெருமையை அழகாக யாரின் மனமும் கோணாமல் அற்புதமாக படம் பிடித்துள்ளார்.

பலவருடங்களாக போராடி, யாரின் தயவு, நிதி உதவி இல்லாமல், சமுதாய மக்களிடையே பிரிவினையை தூண்டி அதன்மூலம் ஆதாயம் அடைய விரும்பாமல், சுயவிளம்பரம் செய்யாமல், யாரிடமும் பொருளதவி பெறாமல் சமூதாயத்தை பெருமை படுத்தும் வகையில் ஜம்பு மஹாரிஷியின் வரலாற்றை தத்ரூபமாக திரைப்படமாக்கியுள்ள இயக்குநர் பாலாஜியை பாராட்டவேண்டும்.

திரைபடத்தின் இடைவேளைவரை விவசாயத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கும் வகையிலும் இந்திய விவசாயத்தை கெடுக்க நினைத்து வெள்ளையரோடு இணைந்து செயல்படுகின்றவரை எதிர்த்து போராடுவதுதாக படம் செல்கிறது.

இடைவேளைக்கு பிறகு புராணவரலாறு செல்கிறது. ஜம்பு மஹாரிஷியின் வரலாறு, யாகம் செய்தல், சிவன் அருளால் ஜம்பு மஹாரிஷி யாகத்தில் தோன்றிய ருத்ரவீரன், வாதாபியை அழித்து இந்த உலகத்தை காப்பதாக படம் எடுக்கப்பட்டுள்ளது.

ருத்ரவீரனின் ஆசியோடு விவசாயிகளுக்கும் இந்தியாவிற்கும் எதிராக செயல்பட்ட நவீன அரக்கர்களை கதாநாயகன் அழிப்பதுடன் படம் நிறைவடைகிறது.

இயக்குநரும், நடிகரும் தயாரிப்பாளருமாகிய திரு.பாலாஜி அவர்கள் தன்னுடைய விவசாயப்பற்று, நாட்டுப்பற்று, ஆண்மீகப்பற்று மற்றும் தன்னுடைய சமூதாயப்பற்றையும் யார் மனதும் புன்படாதவகையில் படத்தை எடுத்தததை பாராட்டுகிறோம்.

ஜம்பு மஹாரிஷி படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறோம்.

படத்தை சமுதாய நல்லிக்க பேரவை, ஜம்பு மஹாரிஷி பேரவை, வன்னியர் முன்னணி, சமூகநீதி சத்திரியர் பேரவை, தமிழ்நாடு வன்னியர் பேரவை, வன்னி மன்னர் தேவி தீர்த்த அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பொருப்பாளர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.