ஜாஸ்பர் திரைவிமர்சனம் ரேட்டிங்:-2./ 5.

நடிகர் நடிகைகள் :- விவேக், ஐஸ்வர்யா தத்தா, ராஜ் கைலேஷ், லாவண்யா, பிரசாந்த் முரளி, கோட்டயம் ரமேஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- யுவராஜ்.டி.

ஒளிப்பதிவு :- மணிகண்டராஜா.

படத்தொகுப்பு :- அபிலாஷ் பாலசந்தரன்

இசை :- குமரன் சிவமணி.

தயாரிப்பு :-  விஷ்வபுரி பிலிம் கார்ப்பரேஷன்.

தயாரிப்பாளர் :- மணிகண்டன் சி..

ரேட்டிங் :- 2. / 5

தமிழ் திரைப்பட உலகில் பலவிதமான ஆக்சன் கதைகள் இருக்கிறது மாறுபட்டு ஆக்சன் திரைப்படம் ஜாஸ்பர் திரைப்படம் மூலம் ஆக்சன் கதையுடன் களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர் யுவராஜ்.டி.

கதாநாயகன் விவேக் ராஜகோபால் ஒரு வங்கியில் அதிகாரியாக மிகவும் நேர்மையாக பணிபுரிந்து வருகிறார்.

மனைவி, மற்றும் குழந்தையுடன் மிகவும் அழகான குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் விவேக் ராஜகோபால்.

அவர் வேலை பார்க்கும் வங்கியில் நேர்மையான அதிகாரி வேலையை செய்யும் தொழிலில் நேர்மையாக இருக்கும் கதாநாயகன் விவேக் ராஜகோபாலுக்கு பல கோடி ரூபாய் பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு மாற்றும்படி வில்லனிடம் இருந்து மிரட்டல் வருகிறது.

குடும்பத்தை காலி செய்து விடுவோம் என்று கதாநாயகன் விவேக் ராஜகோபாலை துப்பாக்கி முனையில் மிரட்டி பணியவும் வைக்கிறது.

வில்லன் கோஷ்டியினர் பணம் கை மாறிய பிறகு கதாநாயகன் விவேக் ராஜகோபாலை கடத்தி சென்று விடுகின்றது

தனது கணவனை மீட்க பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரிடம் உதவி கேட்கிறார் மனைவி.

சி.எம்.பாலா இள வயதில் ரவுடியாக வலம் வரும் அவட ஒரு ஊமைப் பெண்ணுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டு பிள்ளையும் பிறக்கிறது.

சி.எம்.பாலாவின் மனைவியை கொன்று விடுகின்றனர்.

இதனால் கதறும் சி.எம்.பாலா தனது பிள்ளையை அனாதை விடுதியில் விட்டுவிட்டு செல்கிறான்.

தான் அனாதை என்ற எண்ணத்தில் வளரும் அவன் கதாநாயகன் விவேக் ராஜகோபால் தன் தோழியை திருமணம் செய்து கொண்டு ஒரு பிள்ளையும் பெற்று வங்கியில் அதிகாரியாக உயர்கிறான்.

அவனை தனது பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணும் சி.எம்.பாலா தன் வீட்டை அவர்களுக்கு வாடகை விடுவது போல் விட்டு அருகில் தனது மகனை வைத்துக் கொள்கிறார்.

இந்நிலையில் வங்கி கொள்ளைக் கூட்டம் ஒன்று கதாநாயகன் விவேக் ராஜகோபாலை கடத்தி செல்கிறது.

இதையறிந்து கோபம் அடையும் சி.எம்.பாலா தனி ஆளாக மகனை கடத்தியவர்களை தேடி செல்கி றான்.

தன் மகனை சி.எம்.பாலா கண்டு கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்க முடியவில்லையா? அந்த நபரின் பின்புலம் என்ன? அவரால் மீட்க முடிந்ததா? என்பதுதான் இந்த ஜாஸ்பர் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஜாஸ்பர் திரைப்படத்தில் விவேக் ராஜகோபால் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகன் விவேக் ராஜகோபால் அப்பாவி கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார்.

குடும்பத்தையும் வங்கியையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர் வெளிப்படுத்தும் உடல் மொழியும் கச்சிதம். இளம் வயதாக வரும் கதாபாத்திரத்தில் அதிரடியில் அமர்க்களம் செய்கிறார்.

இந்த ஜாஸ்பர் திரைப்படத்தில் கதாநாயகியாக லாவண்யா நடித்திருக்கிறார்.

கதாநாயகி லாவண்யா சில இடங்களில் மட்டுமே வந்தாலும் நடிப்பிலும் தோற்றத்திலும் ஸ்கோர் செய்கிறார்.

இரண்டாவது நாயகியாக வரும் ஐஸ்வர்யா தத்தாவும் நடிப்பு அருமை.

முன்னாள் வில்லனாகவும் இந்நாள் நல்லவனாகவும் வரும் முரட்டு மனிதன் கேரக்டருக்குள் கச்சிதமாக பொருந்திக் கொள்கிறார் சி.எம்.பாலா.

பிரபல டிரம்ஸ் சிவமணி மகன் குமரன் சிவமணி இந்த ஜாஸ்பர் திரைப்படத்தில் இசை அமைப்பாளராக அறிமுக ஆகியிருக்கிறார்.

பிரபல ‘டிரம்ஸ்’ கலைஞர் சிவமணியின் மகன் அறிமுக இசையமைப்பாளர் குமரன் சிவமணி முதல் திரைப்படத்தில் நூறு மார்க் வாங்கியுள்ளார்.

‘டிரம்ஸ்’ கலைஞர் சிவமணி எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது உறுதியாகிறது.

ஒளிப்பதிவாளர் மணிகண்ட ராஜா காடு, மேடு, இருள் என எல்லா இடத்திலும் தன்னுடைய கேமரா வித்தையை காண்பித்து திரைப்படத்தை மெருகேற்றியுள்ளார்.

ஆனால், ஒரு சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு தெரிகிறது.

மெதுவாகவும், ஸ்வாரசியம் இல்லாமல் திரைக்கதை செல்வதாலும் திரைப்படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.

இயங யுவராஜ்.டி. கதையில் உள்ள குழப்பதை தவிர்த்திருந்தால் முழுமையான ஆக்‌ஷன் திரைப்படமாகியி ருக்கும் .

மொத்தத்தில் ‘ஜாஸ்பர்’ திரைப்படம் சுவாரஸ்யம் குறைவு.