காரி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.75//5

நடிகர் நடிகைகள் :- சசிகுமார், பார்வதி அருண், ஆடுகளம் நரேன், ஜேடி சக்கரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம்குமார், சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார் கணேசன், தேனி முருகன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஹேமந்த்.

ஒளிப்பதிவு :- கணேஷ் சந்திரா.

படத்தொகுப்பு :- . சிவ நந்தீஸ்வரன்.

இசை :- டி.இமான்.

தயாரிப்பு நிறுவனம் :- பிரின்ஸ் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- எஸ்.லஷ்மண் குமார்.

ரேட்டிங் :- 3.75 / 5

தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து கிராமத்து திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த நடிகர் சசிகுமார் சமீபத்தில் தடம் புரண்டு நான் மிருகமாய் மாற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் சசிகுமார் நான் மிருகமாய் மாற திரைப்படத்தை நடித்தது ஆனால் அதுவும் கை கொடுக்காததால் மீண்டும் கிராமத்து பக்கம் ஒதுங்கிய திரைப்படம்தான் காரி.

ஜல்லிக்கட்டு என்பது வெறும் வீர விளையாட்டு மட்டுமல்ல அது மக்களின் உணர்வோடு தமிழன் வாழ்வாதாரத்தோடு காளைகள் தொடர்புடையது என்பதை தெள்ளத் தெளிவாக அழுத்தம் திருத்தமாக சொல்லும் திரைப்படம்தான், காரி.

ராமநாதபுரம் மாவட்டத்தின் அருகில் உள்ள காரியூர் மற்றும் சிவனேந்தல் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் கருப்பன் சாமி கோவில் யாருக்கு சொந்தம் எந்த ஊர் நிர்வாகம் செய்வது என பல ஆண்டுகளாக இரண்டு கிராமங்களுக்கும் பகை இருந்து வருகிறது.

கருப்பன் சாமி கோவிலில் திருவிழா நடக்காமல் பல ஆண்டுகளாக  இருந்து வருகிறது.

ஊர் பெரியவர்கள் கருப்பன் சாமி கோவில் திருவிழாவை நடத்த முடிவு செய்கிறார்கள்.

அந்த ஊரில் திருவிழா நடத்த வேண்டும் என்றால் 18 விதமான காளைகளை தயார் செய்து ஜல்லிக்கட்டு நடத்தி அதில் வெற்றி பெறும் ஊர் கருப்பன் சாமி கோயில் நிர்வாகத்தை எடுத்துக்கொண்டு திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததா? நடக்கவில்லையா? இந்த போட்டியில் இந்த ஊர் வெற்றி பெற்றது? எந்த ஊர் கருப்பன் சாமி கோவில் நிர்வாக  பொறுப்பை ஏற்றது? என்பதுதான் இநத காரி திரைப்படத்தின் மீதி கதை.

இந்த காரி திரைப்படத்தில் கதாநாயகன் சசிகுமார் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சசிகுமாரின் தனித்துவமான கிராமத்து நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெறுகிறார்.

அவருடைய நடிப்புக்கு இநத நிரைப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த காரி திரைப்படத்தில் கதாப்பாத்திரத்துக்கு ஏற்றார்ப் போல் நடிகர் சசிகுமார் மிக நடிப்பை கொடுத்து நடித்துள்ளார்.

இந்த காரி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் பார்வதி அருண் அழகான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

கதாநாயகி பார்வதி அருண் நடிப்பு காரி திரைப்படம் பார்க்கும் அனைவராலும் பாராட்டும் படியாக அமைந்துள்ளது.

கதாநாயகன் சசிகுமார் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊர் பெரியவர் கதாபாத்திரத்தில் நடிகர் நாகி நீடு மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

ஜேடி சக்கரவர்த்தி கார்ப்பரேட் வில்லன் கதாப்பாத்திரத்தில் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்.

மேலும் அம்மு அபிராமி, சம்யுக்தா, பிரேம்குமார், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல் ராம்குமார் கணேசன், தேனி முருகன், உள்ளிட்ட பலரும் அவர்களுடைய பணியை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் டி.இமானின் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்த்ராவின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப் பலமாக அமைந்துள்ளது.

இந்த காரி திரைபபடத்தின் கதையையும் வித்யாசமான கதைக்களத்தையும் வடிவமைத்து பாராட்டுக்களை பெறுகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த்.

மண்வாசம் மண மனம் மாறாத அழகான கிராமத்து கதையை சிறப்பாகவே கையாண்டு உள்ளார் அறிமுக இயக்குனர் ஹேமந்த்.

கதையின் திரைக்கதையும் விலங்குகளுக்கு இருக்கும் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

திரைப்படத்தின் வசனங்கள் கூடுதல் பலம்.

பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

18 வகை காளைகளை பற்றி இந்த திரைப்படத்தில் மிகவும் அருமையாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த்.

சர்கார் திரைப்படத்தில சமூக அக்கறையுடன் தண்ணீர் பாட்டில் பிரச்சனையை திரைப்படமாகி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த காரி திரைப்படத்தில் தமிழனின் பாரம்பரியத்தை காளைகளின் மகத்துவத்தை கூறி சமூக அக்கறையுடன் கதைகளை திரைப்படமாக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ்.  எஸ். லஷ்மண் குமார். அவர்களுக்கு பாராட்டுகள்.

மொத்தத்தில் காரி திரைப்படத்திற்கு மிகப்பெரிய பாராட்டுகள்.