காழ் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள்:- யுகேந்திரன் வாசுதேவன், சித்தார்த் அன்பரசு, மிமி லியோனார்ட், நித்யா பாலசுப்ரமணியன், அஸ்வின் விஸ்வநாதன், பெரோஸ் பாஷா, கமல் கிருஷ்ணா, ஸ்ரீமிஜுன், மார்க் ராபர்ட்ஸ், அந்தோனி ஃபோகாஸ், அருணா அற்புதம், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மோகன்ராஜ் வி.ஜே.

ஒளிப்பதிவாளர் :- வசந்த கங்காதரன்.

படத்தொகுப்பாளர் :- பற்றவைத்த அஸ்வின்.

இசையமைப்பாளர்கள் :- ஹெல்வின் கே.எஸ்
சஞ்சய் அரக்கல்.

தயாரிப்பு நிறுவனம் :- ஜி.ஏம். பிலிம்ஸ் இன்டர்நேஷனல். Skka பிலிம்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- மோகன்ராஜ் வி.ஜே செல்வா, கதிரேசன், கிருஷிகா ஆனந்தன்.

ரேட்டிங் :- 2.75/5.

ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழரான கதாநாயகன் யுகேந்திரன், மனைவி மிமி லியோனர்டுடன் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் யுகேந்திரனுக்கும் அவருடைய மனைவி மிமி லியோனர்ட் எப்படியாவது ஒரு சொந்தமாக  வீடு கட்டி விட வேண்டும் என்ற கனவு கனவுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

தங்களுக்கு சொந்தமாக வீடு கட்டுவதற்காக மிகவும் கடுமையாக உழைத்து வங்கியில் கடன் வாங்கி வீட்டைக் கட்டி முடிக்க திட்டமிடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் போலி ஆதாரங்களை வைத்து வங்கியில் கடன் வாங்கி தருவதாக சொல்லி ஒரு தமிழர் கதாநாயகன் யுகேந்திரனை மோசடி செய்து விட்டு தலை மறைவாகி விடுகிறார்.

கதாநாயகன் யுகேந்திரனின் வீடு கட்டப்படும் வேலையில் நிறுத்தப்பட்டு அடிப்படை வேலைகளோடு நின்று விடுகிறது.

ஆஸ்திரேலியாவில் தங்கி ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்து வரும் சித்தார்த் அன்பரசு, தன்னுடைய விசா காலம் முடிவடையும் நிலையில் இருக்க, அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்துக் கொண்டு  நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிக்கிறார்.

நிரந்தர குடியுரிமை பெற அதிகமாக பணம் தேவைப்படுகிறது.

அவருடைய காதலி நித்யா பாலசுப்ரமணியம் சித்தார்த் அன்பரசுக்கு உதவி செய்கிறார்.

ஆனால், சித்தார்த் அன்பரசுடன் வேலை பார்க்கும் நண்பர் மூலமாக சித்தார்த் அன்பரசுக்கு பிரச்சனை ஏற்படுகிறது

இறுதியில் கதாநாயகன் யுகேந்திரன் வீடு கட்டும் கனவு நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? சித்தார்த் நிரந்தர குடியுரிமை பெற்றாரா? நிரந்தர குடியுரிமை பெறவில்லையா? என்பதுதான்  இந்த காழ் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தக் காழ் திரைப்படத்தில் கதையின் நாயகனாக யுகேந்திரன் வாசுதேவன் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யுகேந்திரன் வாசுதேவன் மிகவும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

வீடு கட்டும் வேலை நின்று போனது கவலையும் ஒருவரால் ஏமாற்றப்பட்ட விரக்தி அதையும் தாண்டி எப்படியாவது தான் கண்ட வீடு கட்டும் கனவு நினைவாக வேண்டும் என்ற நம்பிக்கையில் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு சீனு என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கதாநாயகன் யுகேந்திரன் வாசுதேவன் அவருடைய மனைவியாக நடித்திருக்கும் மிமிலியானர்ட் இலங்கை தமிழ் பேசி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

கதாநாயகன் யுகேந்திரன் வாசுதேவன் சோர்வடையும் போதெல்லாம் பக்க பலமாகவும் உறுதுணையாகவும் பேசி ரசிகர்கள் கவனத்தைப் பெறுகிறார்.

அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை பார்க்கும் சித்தார்த் அன்பரசு சராசரியாக வெளிநாட்டில் வேலை பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக பிரதிபலிக்கிறார்.

அனைவரையும் நம்பிவிடும் அப்பாவித்தனமான நடிப்பை மிக அருமையாக கொடுத்திருக்கிறார்.

சித்தார்த் அன்பரசின் காதலியாக வரும் நித்யா பாலசுப்பிரமணியன் மிகவும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளார்.

சுவாமி என்ற கதாபாத்திரத்தில் அஸ்வின் விஸ்வநாதன் சாதிய வெறி வைத்துக் கொண்டு வாழும் கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் வசந்த் கங்காதரன் ஆஸ்திரேலியாவை ஒளிப்பதிவின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார்.

ஹெல்வின் கே.எஸ் சஞ்சய் அரக்கல் ஆகியோரின் இசை திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஹெல்வின் கே.எஸ் சஞ்சய் அரக்கல் ஆகியோரின் பின்னணி இசையும் கவர்ந்து இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வாழும் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த காழ் திரைப்படத்தை இருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜ்.

மொத்தத்தில் இந்த காழ் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டு கஷ்டப்படும் தமிழர்களை பற்றியது  பார்க்க வேண்டிய திரைப்படம்.