காடுவெட்டி திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஆர். கே. சுரேஷ்,, சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்ரமணியசிவா, அகிலன், ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா சுப்பிரமணியன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சோலை ஆறுமுகம்.

ஒளிப்பதிவாளர் :- M. புகழேந்தி.

படத்தொகுப்பாளர் :- ஜான் ஆப்ரகாம்.

இசையமைப்பாளர் :- ஸ்ரீகாந்த் தேவா, வணக்கம் தமிழா சாதிக்.

தயாரிப்பு நிறுவனம் :- மஞ்சள் ஸ்கிரீன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம்.

நகரத்தில் உள்ள காதலை படிப்பறிவு இருக்கும் பெற்றோர்களும் மக்களும் எவ்வாறு காதலிக்கும் காதலர்களை எப்படி சேர்த்து வைக்கிறார்கள்.

நகரத்தில் உள்ள மக்களுக்கு போதுமான கல்வி அறிவும் பொருளாதார மேம்பாடும் இருப்பதால் நகரத்தில் பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்கின்றனர்.

கிராமத்தில் உள்ள படிப்பறிவு இல்லாத பெற்றோர்கள் மற்றும் மக்கள் எவ்வாறு காதலர்களை துன்பப்படுத்தப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த காடுவெட்டி திரைப்படத்தை இருக்கிறார் இயக்குனர்.

தன்னுடைய சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வைக்கும் சாதி சங்க தலைவராக ஆர் .கே.சுரேஷ் இருக்கிறார்.

இவர் காதல் திருமணத்தால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்தும் பேசுகிறார்.

ஆர் .கே. சுரேஷ் தனது சமூகத்தை சார்ந்த நடைபெறும் பிரச்னைகளை தீர்க்கும் நபராக வருகின்றார்.

தெருக்கூத்து கலைஞரான சுப்பிரமணிய சிவாவின் மகள் கதாநாயகி சங்கீர்த்தனா வேறு ஒரு சாதியைச் சேர்ந்த கதாநாயகன் அகிலனை காதலித்து வருவதால்,

தெருக்கூத்து கலைஞரான சுப்பிரமணிய சிவாவை பஞ்சாயத்துக்கு அழைத்து ஊர் வழக்கப்படி உனது மகளை கதாநாயகி சங்கீர்த்தனா கொலை செய்துவிடுமாறும், இல்லை என்றால் அவள் தனக்கு பிறக்கவில்லை என்று சொல்லுமாறும், பஞ்சாயத்தில் உள்ளவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

பஞ்சாயாத்துக்கு கட்டுப்பட்டு தான் பெற்ற மகள் கதாநாயகி சங்கீர்த்தனா சுப்பிரமணிய சிவா கொலை செய்தாரா?, கொலை செய்யவில்லையா? என்பதுதான் ‘காடுவெட்டி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தக் காடுவெட்டி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆர்கே சுரேஷ் நடித்திருக்கிறார்.

குரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடித்து தன்னை நல்ல நடிகராக அடையாளப்படுத்திக் கொண்டார்.

இந்த காடுவெட்டி திரைப்படத்தில் ஆர்கே சுரேஷின் கதாபாத்திரம் மிகவும் ஓவராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தெருக்கூத்து கலைஞராக நடித்திருக்கும் சுப்பிரமணி சிவா, சாதி பெருமை பேசும் மக்களால், பெற்ற பிள்ளைகளை பறிகொடுக்கும் பெற்றோர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கண்ணீர் கண்ணீரை வரவழைத்து விடுகிறார்.

அகிலன் சித்தப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதிரா பாண்டிலட்சுமி, விஷ்மயா விஷ்வாந்த், சாந்தி மாறன், சுப்பிரமணியம், அகிலன், சுபாஷ் சந்திரபோஸ், ஜெயம் எஸ்.கே,கோபி, சங்கீர்த்தனா விபின் என இந்த காடுவெட்டி திரைப்படத்தின் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.புகழேந்தியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் வணக்கம் தமிழா சாதிக்கின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை கதை ஏற்றவாறு பயணித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நடந்த ஆணவக் கொலை சம்பவத்தை வேறுமாதிரியாக சித்தரித்து காட்சிப்படுத்திய விதம் இயக்குனரிடம் மனதில் இருக்கும் வன்மத்தை வெளிக்காட்டியிருக்கிறது.

இயக்குநர் சோலை ஆறுமுகம்,
பல்வேறு சாதியை சேர்ந்தவர்கள் காதலித்தால் அதை நாடக காதல் என்று சொல்பவர்கள், அதற்கான விளக்கத்தை தெளிவாகவும் காட்சிப்படுத்திருக்கலாம்.

ஆனால், அதைவிட்டுவிட்டு தட்பெருமை பேசிக்கொண்டு, மற்றவர்களை இழிவாக சித்தரித்து, தவறான கருத்துக்களையும், காட்சிகளை திரைப்படத்தில் திணித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில், இந்த ‘காடுவெட்டி’ திரைப்படம் தன்து சாதியில் பெருமை பேசுகிறேன் என்ற பெயரில் அச்சாதியின மக்களை கேவலப்படுத்தி இருக்கிறார்.