கலகத்தலைவன் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.75/5

நடிகர் நடிகைகள் :- உதயநிதி ஸ்டாலின், கலையரசன், ஆரவ், அங்கனா ராய், ஜீவா ரவி, நிதி அகர்வால், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், அனுபமா குமார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மகிழ் திருமேனி.

ஒளிப்பதிவு :- கே தில் ராஜ்.

படத்தொகுப்பு :- ஸ்ரீகாந்த் என்.பி.

இசை :- அரோல் கொரெல்லி – ஸ்ரீகாந்த் தேவா.

தயாரிப்பு :- ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

தயாரிப்பாளர் ;- உதயநிதி ஸ்டாலின்.

ரேட்டிங் :- 3.75 / 5

ஒரு சீசனில் தமிழ் திரைப்பட உலகில் உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளை பற்றி நிறைய திரைப்படங்கள் வந்தன.

அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் என்ற தனிப்பட்ட நபரை மட்டும் வில்லன்களாக காண்பித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட உலகில் பல விதமான ஆக்ஷன் த்ரில்லர் பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிப்பில் இந்த கலகத்தலைவன் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது

கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், கனரக வாகனங்கள் தயார் செய்யும் வஜ்ரா என்ற கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

கனரக வாகனங்கள் தயார் செய்யும் வஜ்ரா என்ற கம்பெனிக்கு சொந்தமான தொழிற்சாலையில்  புது வகையான ஒரு அதிக கிலோமீட்டர் கொடுக்கும் கனரக வாகனத்தை கண்டுபிடித்து உற்பத்தி செய்கிறார்கள்.

அந்த கனரக வாகனம் மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன் அந்த கனரக வாகனத்தின் மூலம் மாசுக்கட்டுப்பாடு இந்த கனரக வாகனத்தால் அதிகம் உருவாகும் என தெரிய வருகிறது.

இந்த கனரக வாகனத்திற்கு மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் அரசின் அனுமதி கிடைப்பது கடினம் என்பதால், உடனடியாக அதை மறைக்க வஜ்ரா கார்ப்பரேட் கம்பெனியின் அதிபர் முயற்சி செய்கிறார்.

மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் அரசின் அனுமதி கிடைப்பது கடினம் என விஷயம் வெளியில் தெரிந்து விடுகிறது

அந்த வஜ்ரா கார்ப்பரேட் கம்பெனியின் இரகசியங்கள் அனைத்தும் திருடு போவதாக வஜ்ரா கார்ப்பரேட் கம்பெனியின் அதிபருக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

அந்த வஜ்ரா கார்ப்பரேட் கம்பெனியின் ரகசியம் எப்படியோ வெளியே தெரிந்து விடுகிறது.

இந்தியாவில் உள்ள பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் வில்லன் ஆரவ்.

இதனால், வஜ்ரா நிறுவனத்தின் ரகசியங்களை திருடுபவரை கண்டு பிடிக்க வில்லன் ஆரவை அந்த கம்பெனி நியமிக்கிறது.

வில்லன் ஆரவ் தலைமையிலான குழு வஜ்ரா கார்ப்பரேட் கம்பெனியின் இரகசியங்கள் திருடுபவரை கண்டுபிடிக்க அதிரடியாக களமிறங்குகிறது.

தன குழு மூலம் வஜ்ரா கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் பலரை அதிரடியாக விசாரித்து வருகிறார்.

ஆனால் கார்ப்பரேட் கம்பெனியின் ரகசியங்களை திருடியவன் யார் என்று தெரியாமல் குழம்பிப் போகிறார்.

கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின்தான் அந்த கார்ப்பரேட் கம்பெனியின் ரகசியங்களை திருடுகிறார் என கண்டுபிடிக்கிறார் வில்லன் ஆரவ்.

இறுதியில் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலினை வில்லன் ஆரவ் கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? வஜ்ரா கார்ப்பரேட் கம்பெனியின் ரகசியங்களை கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் திருடுவதற்கான காரணம் என்ன? என்பதுதான் இந்த கலகத்தலைவன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கலகத்தலைவன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

திரு கதாபாத்திரத்தில் வரும் உதயநிதி ஸ்டாலின், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பல காட்சிகளில் கண் பார்வையாலே நடித்திருக்கிறார்.

கதாநாயகி நிதி அகர்வாலை காதலிப்பது, நண்பன் கலையரசனுக்காக வருந்துவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

கதாநாயகன் உதயநிதி ஸ்டாலினின் நண்பனாக கலையரசன் நடித்துள்ளார்.

அவர் நடித்த கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்து அசத்திருக்கிறார்.

சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பதிந்து இருக்கிறார் கலையரசன்.

கார்ப்பரேட் கம்பெனிகளின் ஸ்டைலான வில்லனாக ஆரவ் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

வில்லன் ஆரவின் மிடுக்கான தோற்றமும், உடல் அமைப்பும் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி உள்ளது.

திரைப்படத்தில் அதிக நேரம் ஆக்கிரமிப்பு செய்து திரைப்படத்திற்கும் திரைக்கதைக்கு வலு சேர்த்து உள்ளார்.

இந்தக் கலகத் தலைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக வரும் நிதி அகர்வால், வழக்கமான கதாநாயகிகள் போல் இல்லாமல், தனக்கு கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்.

காதலா… தனது லட்சியமா என்று முடிவெடுக்கும் காட்சியில் கதாநாயகி நிதி அகர்வால் கைத்தட்டல் வாங்குகிறார்.

திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாப்பாத்திரங்களிடையே மிக திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.

இசையமைப்பாளர் அரோல் கொரெல்லி பாடல்களும் ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு மிகப்பெரியதாக பலம் சேர்த்து இருக்கிறது.

அதுபோல் ஒளிப்பதிவாளர் கே.தில்ராஜின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இயக்குனர் மகிழ் திருமேனி மனதில் எப்படி எல்லாம் நினைத்தாரோ அதை ஒளிப்பதிவு மூலம் நிரூபித்து விட்டார் ஒளிப்பதிவாளர் கே.தில்ராஜ்

ஸ்ரீகாந்த் என்.பி படத்தொகுப்பு அருமை.

திருச்சிராப்பள்ளி ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் காட்சிகள் விறு விறுப்பாகவும், வித்தியாசமான கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சியையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.

கார்ப்பரேட் நிறுவனத்தின் கொள்ளை, அதனால் பாதிக்கப்படும் மக்கள், பொருளாதாரத்தின் நிலைமை, அரசியல் என கலகத்தலைவன் திரைப்படத்தில் பல விஷயங்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.

இந்த கலகத்தலைவன் திரைப்படத்தில் நேரத்தை குறைத்து இருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் கலகத் தலைவன் திரைப்படம் கார்ப்பரேட் நிறுவனங்களை களை எடுக்கும் தலைவன்.