திரையுலகத்திற்கு ‘பாதுகாப்பு குழு’ அமைக்க கமல்ஹாசன் & இயக்குனர் ஷங்கர் தலைமையில் முடிவு!

லைகா நிறுவனம் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் ஆகியோரது கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2′.

இதன் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

இதனால் படப்பிடிப்பு தளங்களில் உள்ள பாதுகாப்பு விவாதப் பொருளாக திரையுலகில் மாறியது.

திரைப்பட பணியாளர்களின் பாதுகாப்பை தயாரிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுந்தது.

இந்த நிலையில் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின் முடிவில் சினிமா ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு குழு ஒன்றை அமைக்கவும், திரைத்துறை சங்கங்கள் அனைத்தும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.