கன்னி திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- அஸ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிரிஷ், ராம் பரதன், பேபி தன்விகா, B. ஜானவி, சரிகா செல்வராஜ், மாதம்மா (பாட்டி), மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மாயோன் சிவா தொரப்பாடி.

ஒளிப்பதிவாளர் :- ராஜ்குமார் பெரியசாமி.

படத்தொகுப்பாளர் :- சாம் ஆர் டி எக்ஸ்.

இசையமைப்பாளர் :- செபாஸ்டியன் சதீஷ்.

தயாரிப்பு நிறுவனம் :- சன் லைஃப் கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர்:- எம்.செல்வராஜ்.

மலைக் கிராமத்தில், செங்கா என்ற பாட்டி வசித்து வரும் தெய்வீகத் தன்மையுடைய ஏழாவது தலைமுறையாக ஓலைப்குடையின் உதவியோடு, மூலிகைகளை பயன்படுத்தி  தீராத நோய்களையெல்லாம் வைந்தியம் செய்து நோய்களை குணப்படுத்துகிறார்.

இந்நிலையில், அந்த மலை கிராமத்திற்கு நிலம் வாங்க வரும் ஒரு மிகப்பெரும் பணக்காரர், ஒருவர் நிலத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென மூச்சு விட முடியாமல் கீழே விழுகிறார்.

அவருடன் நிலம் பார்க்க வந்தவர்கள் அவரை மூலிகை வைத்தியம் பார்க்கும் பாட்டி செங்காவிடம் அழைத்துச் செல்கின்றனர்.

சில நாட்களில், மூலிகை சிகிச்சைப் பெற்ற பிறகு, நிலம் பார்க்க வந்த மிகப்பெரும் பணக்காரரான பல வருடங்களாக இருந்த தீராத நோய் காணாமல் போகிறது.

மிகப் பெரும் பணக்காரர் தனக்குள்ள மிகப்பெரிய நோய் குணமாகி விட்டதால் மிகப்பெரிய  சந்தோஷத்துடன் அவருடைய சொந்த ஊருக்கு திரும்புகிறார்.

மலைக் கிராமத்தில், வாழும் செங்கா பாட்டியிடம் மூலிகை வைத்தியம் பார்த்த அந்த பெரும் பணக்காரரின் உடலை சோதிப்பதற்கு, பல உலக நாடுகளில் இருந்து  மிகப்பெரும் மருத்துவர்கள், அதிர்ச்சியடைகிறார்கள்..

மலைக் கிராமத்தில், மூலிகை வைத்தியம் செய்யும் செங்கா  பாட்டியிடம் இருந்து, அந்த ஓலைப்குடையை, மிகப்பெரும் பணக்காரர்கள் அபகரிக்க முயற்சி செய்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க கதாநாயகி அஸ்வினி சந்திரசேகர், தனது சொந்த ஊரை விட்டுட்டு, தன் அண்ணன் மகள் இருவரையும் அழைத்துக் கொண்டு காட்டு வழியாக மலைகிராமத்தில் வாழும்
தனது உறவினரின் வீட்டிற்குச் செல்கிறார்.

மலைகிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் வாழ்ந்து வரும் கதாநாயகி அஸ்வினி சந்திரசேகரை கொலை செய்வதற்காக ஒரு கும்பல் அந்த மலைக்கிராமத்திற்கு வருகிறார்கள்.

கதாநாயகி அஸ்வினி சந்திரசேகரை கொலை செய்து அவரிடம் இருக்கும்  ஒரு முக்கியமான பொருளை  எடுப்பதற்காக அங்கு வருகிறார்கள்.

அந்த மலைப் பகுதியில் உள்ள கதாநாயகி அஸ்வினி சந்திரசேகரை தேடிவரும் அந்த கும்பல் யார்.? எதற்காக கதாநாயகி அஸ்வினி சந்திரசேகரை கொலை செய்ய துடிக்கிறார்கள்? என்பதுதான் இந்த கன்னி திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த கன்னி திரைப்படத்தில் கதாநாயகியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.

கதாநாயகி அஸ்வினி சந்திரசேகரை சுற்றியே நடக்கும் கதையாக பயணப்படுகிறது.

தன் அண்ணன் மனைவி மீது இருக்கும் பாசத்தை அண்ணனிடம் கூறும் இடமாக இருக்கட்டும், தன்னை கொல்ல வருபவர்களை கையில் கிடைக்கும் ஆயுதத்தை எடுத்து அவர்களை வதம் செய்யும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் நடிப்பின் மூலம்  ஸ்கோர் செய்திருக்கிறார்.

பல திரைப்படங்களில் நடித்த மணிமாறன் இந்தக் கன்னி திரைப்படத்தில் வேடன் கதாபாத்திரத்தில் கதாநாயகி அஸ்வினி சந்திரசேகர் அண்ணனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார்.

மணிமாறனை வில்லனாகவே பார்த்து பழகிய நமக்கு, மிகவும் நல்லவனாக அவருடைய நடிப்பின் மூலம் ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறார்.

செங்காவாக, நடித்திருக்கும் மாதம்மா வேல்முருகன், மருமகள் நீலிமாவாக தாரா க்ரிஷ், மச்சழகனாக ராம் பரதன், மாயம்மாவாக சரிகா செல்வராஜ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்த மிகவும் மட்டமான நடிப்பை கொடுத்து அந்த கதாபாத்திரத்தை மிக ஓவராக நடித்து கெடுத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பெரியசாமி ஒளிப்பதிவின் மூலம் இந்த கன்னி திரைப்படத்தை மிக அருமையாக கையாண்டு இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பெரியசாமியின் ஒளிப்பதிவில், காடுகள் பிரம்மாண்டமாகவும், அழகாகவும் காண்பித்திருக்கிறார்.

இசையமைப்பாளர்  செபாஸ்டியன் சதீஷ் இசை மற்றும் பாடல் பின்னர் இசை கதைக்கேற்றவாறு  பயணித்திருக்கிறார்.

இயற்கை முறை மூலிகை வைத்தியத்தை பற்றிய கதையாக நகர்கிறது.

இயற்கை முறை மூலிகை வைத்தியத்தின் மகிமையையும் அதன் பலன்களையும் தடுக்க நினைக்கும் மருந்து கம்பெனியை எதிர்த்து போராடும் ஒரு தனித்துவமான கதையை கையில் எடுத்த இயக்குனர் மாயோன் சிவா தொரப்பாடி. மிகப்பெரிய வாழ்த்துகள்.

மொத்தத்தில் – கன்னி இயற்கை முறை மூலிகை வைத்தியத்தின் மகிமையை கூறும் திரைப்படம்.

ரேட்டிங் :- 2.5/5.