கழுவேத்தி மூர்க்கன் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.5/5.

நடிகர் & நடிகைகள் :- அருள்நிதி தமிழரசு, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், சாயாதேவி யார் கண்ணன், முனிஷ்காந்த், ராஜசிம்மன், சரத் லோகித்தாஷ்வா, யார் கண்ணன், பத்மன், ஜக்குபாண்டி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- செ. கௌதமா ராஜ்.

ஒளிப்பதிவு :- ஸ்ரீதர்.

படத்தொகுப்பு :-  நாகூரன்.

இசை :-  டி இம்மான்

தயாரிப்பு நிறுவனம் :-  ஒலிம்பியா மூவீஸ்.

தயாரிப்பாளர் :- அம்பேத்குமார் –
ஜெயந்தி அம்பேத்குமார்.

ரேட்டிங் :- 3.5./ 5.

ராமநாதபுரம் மாவட்டம் தெற்குப்பட்டி கிராமத்தில் இரண்டு சாதியை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் மேலத்தெருவில் கதாநாயகன் அருள்நிதியும் கீழத்தெருவில் சந்தோஷ் பிரதாப்பும் சிறு வயது முதலே இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

இதில் கதாநாயகன் அருள்நிதி மிகவும் முன் கோபக்காராகவும் சந்தோஷ் பிரதாப் மிகவும் அந்த கிராமத்தில் நல்லது கெட்டது அனைத்திலும் பொறுப்பானவராகவும் இருக்கிறார்.

இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருபது மாவட்ட தலைவராக இருக்கும் ராஜ சிம்மனின் அரசியல் ஆதாயத்திற்கு மிகவும் தடையாக இருக்கிறது.

தடையாக இருக்கும் சந்தோஷ் பிரதாப்பை சூழ்ச்சி செய்து கொலை செய்து விடுகிறார்கள்.

சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்த பழி கதாநாயகன் அருள்நிதி தான் கொலை செய்தார் என அவர் மீது கொலை பழி விழுகிறது.

காவல்துறையினர் ஒருபக்கம் கொலைக்காரன் கதாநாயகன் அருள்நிதியை தேடுகிறீர்கள்.

தனது உயிர் நண்பன் சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்தவர்களை பழி வாங்க ஒருபக்கம் தேடுகிறார்.

இறுதியில் காவல்துறையினர் கதாநாயகன் அருள்நிதி கண்டுபிடித்தார்களா? கண்டு பிடிக்கவில்லையா?

இது ஒரு பக்கம் இருக்க தன் நண்பன் சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்தவர்களை கதாநாயகன் அருள்நிதி பழிவாங்கினாரா? பழி வாங்கவில்லையா? என்பதுதான் இந்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கரடு முரடான மூர்க்க சாமி கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காதல், சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.

குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அதிகமாக ஸ்கோர் செய்து இருக்கிறார்.

இந்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கதாநாயகி துஷாரா விஜயன் துறுதுறுவான மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இவரது எதார்த்தமான திமிரான நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது.

கதாநாயகன் அருள்நிதிக்கு நெருங்கிய நண்பராக பூமி கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப் மிகவும் அருமையாக நடித்துள்ளார்.

சந்தோஷ் பிரதாப் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக வரும் சாயா தேவி மனதில் பதிந்திருக்கிறார்.

உண்மை என்னும் கதாபாத்திரத்தில் முனிஸ்காந்த் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார் .

காவல்துறை அதிகாரியாக வரும் சரத் லோகித்தாஷ்வா யார் கண்ணன், ராஜசிம்மன், பத்மன், ஜக்குபாண்டி அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஶ்ரீதரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அப்படியே படம் பிடித்து காண்பித்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் இமானின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இரண்டு சாதியை வைத்து பல கதைகள் உள்ள திரைப்படங்கள் ஏற்கனவே வந்திருக்கிறது.

அந்த வரிசையில் இந்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் செ. கௌதம ராஜ்.

சந்தோஷ் பிரதாப் கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்து அனைத்து கதாபாத்திரங்களிடையே மிக திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் செ. கௌதம ராஜ்.

காதல் காட்சிகளை ரசிக்கும்படி எடுத்து இருக்கிறார்.

மொத்தத்தில் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் மிகவும் உண்மையானவன்.