சென்னை அடையாறில் ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'( Kiki’s Dance Studio)வை தொடங்கிய நடிகை கிகி சாந்தனு!
இங்கு ஃபிட் கிட்ஸ் எனும் உடற்பயிற்சி கூடம் உள்ளது . அவர்களுடன் இணைந்து, ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ’வை தொடங்கியிருக்கிறார்.இதன் தொடக்க விழாவில் பூர்ணிமா பாக்யராஜ், கே. பாக்யராஜ், நடிகர் கலையரசன், பரத், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜனனி, சம்யுக்தா ஷான், திருமதி சுஹாசினி மணிரத்னம், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு கிகி சாந்தனு மற்றும் சாந்தனு பாக்யராஜிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.இந்த டான்ஸ் ஸ்டுடியோவில் சோர்வான மனநிலையில் வருகை தந்தாலும் அல்லது உற்சாகமற்ற சூழலில் வருகை தந்தாலும்.. உங்கள் மனதுக்கு பிடித்த பாடலை ஒலிக்க விட்டு.. அதற்காக உங்களுக்கு சௌகரியமான முறையில் டான்ஸ் ஆடினால்.. உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடைந்து மகிழ்ச்சி பரவுவதை உணர்வீர்கள்.சென்னை தி. நகரை தொடர்ந்து அடையாறு பகுதியிலும் தன்னுடைய கலை சேவையை விரிவு படுத்தி இருக்கும் நாட்டிய மங்கை கிகி சாந்தனுவை திரையுலகத்தினரும், கலை உலகத்தினரும் மனதார வாழ்த்துகிறார்கள்.
இந்த டான்ஸ் ஸ்டுடியோவின் உள்கட்டமைப்பு.. நடன கலைஞர்கள் நடனப் பயிற்சி பெறுவதற்கு வசதியாக பிரத்யேகமான முறையிலும், சர்வதேச தரத்திலும் ஒலி மற்றும் ஒளி அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் தனி சிறப்பம்சம்.