கும்பாரி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.25/ 5.

நடிகர் & நடிகைகள் :- விஜய் விஷ்வா, நலீம் ஜியா, மஹானா சஞ்சீவி, ஜான் விஜய், சாம்ஸ், பருத்திவீரன் சரவணன்,  மதுமிதா, செந்திகுமாரி, காதல் சுகுமார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கெவின் ஜோசப்.

ஒளிப்பதிவாளர் :- பிரசாத் ஆறுமுகம்.

படத்தொகுப்பாளர் :- டி.எஸ்.ஜெய்.

இசையமைப்பாளர்கள் :- ஜெய் பிரகாஷ் -ஜெய்சன்- ப்ரித்வி.

தயாரிப்பு நிறுவனம்:- ராயல் என்டர்பிரைசஸ்.

தயாரிப்பாளர்கள் :-  டி. குமாரதாஸ்.

ரேட்டிங் :- 2.25/ 5.

கன்னியாகுமரி மாவட்டத்தில்  கேபிள் டிவி ஆபரேட்டராக இருக்கும் கதாநாயகன் விஜய் விஷ்வாவும் மீன் பிடி தொழில் செய்யும் நண்பர் நலீப் ஜியாவும் இருவரும் இணை பிரியாத உயிருக்கு உயிராக உள்ள நண்பர்கள் தாய் தந்தை இல்லாமல் அனாதை இருக்கும் இவர்கள் ஒருவரை ஒருவர்  விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு நாள் கதாநாயகி மஹானாவை பல  ரவுடிகள் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்.

ஓடும் வழியில் கதாநாயகி மஹானா கண்ணில் பட்ட அனைவரிடமும் தன்னைக் காப்பாற்றும் படி உதவி கேட்கிறார்.

தன்னை காப்பாற்றும் படி உதவி கேட்டு யாரும் வராத இந்த நிலையில் இதைப் பார்த்த கதாநாயகன் விஜய் விஷ்வா அந்த ரெளடிகளை விரட்டுகிறார்.

அதன் பிறகுதான் அது கதாநாயகி மஹானா நடத்தும் யூடியூப் சேனலுக்காக எடுக்கப்படும் ஒரு பிராங்க் வீடியோ என கதாநாயகன் விஜய் விஸ்வாவுக்கு தெரிய வருகிறது .

இதை அறிந்து கதாநாயகி மஹானாவை கதாநாயகன் விஜய் விஷ்வா ஓங்கி அறைந்து விட உனது யூடியூப் சேனலை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்று இப்படி ஏமாற்றலாமா? என்று திட்டுகிறார்.

கதாநாயகி மஹானாவின் யூடியூப் சேனலை அந்த பிராங்க் வீடியோ பல லட்சம் பேரால் பார்க்கிறார்கள்.

கதாநாயகி மஹானா, அந்த மோதலுக்குப் பின் கதாநாயகன் விஜய் விஷ்வாவின் துணிவும் அவரது குணமும் பிடித்துப் போக
அவர் மீது காதலில் விழுகிறார்.

உடனடியாக கதாநாயகன் விஜய் விஷாவவை திருமணம் செய்து கொள்ள கதாநாயகி மஹானா முடிவு எடுக்கிறார்.

கதாநாயகன் விஜய் விஷ்வா மற்றும் கதாநாயகி மஹானா திருமணம் செய்து கொள்வதற்காக ரிஜிஸ்டர் ஆஃபீஸில் செல்ல இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் ஒரு மிகப்பெரிய சிக்கல் உண்டாகிறது.

கதாநாயகி மஹானாவுக்கு திருமணம் செய்து கொள்வதற்கு திருமண வயது 21 ஆகவேண்டுமென்றால் இன்னும் ஏழு நாட்கள் உள்ளது.

ஏழு நாட்களுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ரிஜிஸ்டர் கூறுகிறார்.

அந்த ஏழு நாட்களை  எப்படியாவது சமாளித்து விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் திட்டமிடுகிறார்கள்.

அதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிப் பல ஊர்களில் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

இருவரையும் சேர்த்து வைக்க கதாநாயகன் விஜய் விஷ்வாவின் நண்பர் நலீம் ஜியா, உதவுகிறார்.

கதாநாயகியின் அண்ணன் ஜான் விஜய்  அடியாட்களை வைத்து வைத்துக்கொண்டு இவர்கள் சொல்லும் ஊருக்கெல்லாம் சென்று துரத்தி கொண்டிருக்கிறார்கள்.

கதாநாயகன் விஜய் விஷ்வா மற்றும் கதாநாயகி மஹானா காதலுக்கு உதவிய நண்பன் நலீம் ஜியா கதாநாயகியின் அண்ணன் ஜான் விஜய் எப்படியாவது பழி வாங்கத் துடிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் கதாநாயகன் விஜய் விஷ்வாவின் நண்பர் நலீம் ஜியா காணாமல் போய்விடுகிறார்.

நண்பன் காணாமல் போனதால்  கதாநாயகி மஹானாவின் அண்ணன் ஜான் விஜய் கோஷ்டியால் கொலை செய்யப்பட்டதாக கதாநாயகன் விஜய் விஷ்வா நம்புகிறார்.

கதாநாயகி மஹானாவின் அண்ணன் ஜான் விஜய் எனது நண்பன் நலீம் ஜியா கொலை செய்திருப்பார்கள் என நீதிமன்றத்திற்கு சொல்கிறார்.

கதாநாயகன் விஜய் விஷ்வாவின் நண்பர் நலீம் ஜியா கொலை செய்யப்படவில்லை என அவருக்கு என்ன ஆயிற்று? கதாநாயகன் விஜய் விஷ்வா காதல் என்னானது? கதாநாயகன் விஜய் விஸ்வா மற்றும் மஹானா காதலில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? என்பதுதான் இந்த கும்பாபி திரைப்படத்தின் மீதி கதை.

இந்த கும்பாரி திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் விசுவா நடித்திருக்கிறார்.

அருண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கதாநாயகன் விஜய் விஷ்வா மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் என சொல்ல தோன்றுகிறது ஆனால் அவர் நன்றாக நடிக்கவில்லை என்பதுதான் உண்மை.

இந்த கும்பாரி திரைப்படத்தில் கதாநாயகியாக மஹானா நடித்திருக்கிறார்.

தர்ஷினி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஹானா அளவான அழகுடன் அளவான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

கதாநாயகி மஹானா அந்தக் கதாபத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் விஜய் விஷ்வாவின் நண்பராக நடித்திருக்கும் நலீம் ஜியா செயற்கை தனமாக நடித்திருக்கிறார்.

ஜோசப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நலீப் ஜியாவும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கவில்லை..

கதாநாயகி மஹானா அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் ஓவர் ஆக்டிங் செய்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கடுப்பேத்தி இருக்கிறார்.

துரை கதாபாத்திரத்தில் ஜான் விஜய் அந்த கதாபாத்திரத்திற்கு தேவை இல்லாத நடிப்பை கொடுத்து திரைப்படம் பார்க்க நம்மை கடுப்பேத்தி விட்டார்.

ஜான் விஜய்க்கு வலது கையாக வரும் சாம்ஸ், ஜான் விஜய்க்கு சித்தப்பாவாக வரும் பருத்திவீரன் சரவணன், கதாநாயகி மஹானாவின் தோழியாக வரும் மதுமிதா, கதாநாயகி மஹானாவின் தாயாக வரும் செந்திகுமாரி, மற்றும் காதல் சுகுமார், இந்த கும்பாரி திரைப்படத்தில் அனைவரும் அருமையாக நடித்துள்ளார்கள்.

ஒல்லியான உருவத்தில் இருக்கும் குடிகாரன் பாத்திரத்தில் வரும் ராயன் கூட சிரிப்பு மூட்டுகிறார்.

ஒளிப்பதிவாளர் பிரசாத் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு திரைப்படத்தின் பெரிய பலமாக இருப்பது என்று கூறலாம்.

கன்னியாகுமரி மண்ணின் அழகு, அருவி, ஆறு, கடல் என்றும் பச்சைப் பசேல் இயற்கைப் பிரதேசங்களையும் தன் கேமராவுக்குள் சிறைப்படுத்திக் காட்சிப்படுத்தியுள்ளார்.

நடுக்கடலில் கதாநாயகனை வில்லனின் படகுகள் சுற்றி வளைப்பதை ட்ரோன் மூலம் திரைப்படம் ஆக்கியிருப்பது மிகவும் அருமையாக உள்ளது.

இசையமைப்பாளர்கள் ஜெய் பிரகாஷ் -ஜெய்சன்- ப்ரித்வி.  தங்கள் பங்கைக் குறையின்றிச் செய்துள்ளனர்.

நட்பை மையப்படுத்தி தான் கதை இருக்கிறது ஆனால் அதற்கான காட்சிகள் மட்டும் இல்லை.

அப்படியென்றால், அதற்கான வலிமையை திரைக்கதையில் இன்னும் அதிகமாகவே கொடுத்திருந்திருக்கலாம்.

திரைக்கதையில் சற்று உயிரோட்டத்தை கொடுத்து இருந்தால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கலாம்.

மொத்தத்தில் -இந்த ‘கும்பாரி’ திரைப்படம் ஒகே.