குற்றம் புரிந்தால் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75./5.

நடிகர் நடிகைகள் :- ஆதிக் பாபு, அர்ச்சனா, எம்.எஸ்.பாஸ்கர், ‘நாடோடிகள்’ அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- டிஸ்னி.

ஒளிப்பதிவு :- கே.கோகுல்.

படத்தொகுப்பு :- எஸ்.பி.அஹமத்.

இசை :- கே.எஸ்.மனோஜ்.

தயாரிப்பு நிறுவனம் :- அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர்:- ஆத்தூர் ஆறுமுகம் -சுகந்தி ஆறுமுகம்.

ரேட்டிங் :- 2.75. / 5.

கதாநாயகன் ஆதிக் பாபு, தன் தாய்மாமன் எம்.எஸ்.பாஸ்கரின் ஆதரவில் வளர்ந்து வருகிறார்.

தன் மாமன் மகள் கதாநாயகி அர்ச்சனாவும் ஆதிக் பாபுவும் உயிருக்குயிராய் காதலித்து வருகிறார்கள்.

கதாநாயகி அர்ச்சனாவுக்கும் படிப்பு முடிந்த உடன் கதாநாயகன் ஆதிக் பாபுக்கும் திருமணம் செய்து வைக்க தாயமாமா எம்.எஸ்.பாஸ்கர் முடிவு செய்கிறார்.

கதாநாயகன் ஆதிக் பாபு தாய்மாமன் எம்.எஸ்.பாஸ்கர் இவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கையில் திடீரென்று இவர்களது வீட்டுக்குள் மர்ம நபர்கள் மூன்று பேரால் கதாநாயகி அர்ச்சனாவை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து அவளுடைய வாழ்க்கை சிதைக்கப்படுகிறது.

கதாநாயகன் ஆதிக்பாபுவின் தாய்மாமன் மற்றும் தனது காதலி கதாநாயகி அர்ச்சனாவும் மரணம் அடைந்து விடுகிறார்கள்.

தன் தாய்மாமாவையும், காதலி கதாநாயகி அர்ச்சனாவும் பரிகொடுக்கும் கதாநாயகன் ஆதிக் பாபு, சட்டத்தின் மூலம் அந்த மூன்று பேருக்கு தண்டனை வாங்கி கொடுக்க முயற்சி செய்கிறார்.

ஆனால், சட்டமும் அந்த மூன்று குற்றவாளிகளுக்கு வளைந்து கொடுக்க, அவர்களுக்கான தண்டனையை தானே கொடுக்க வேண்டும் என கதாநாயகன் ஆதிக்பாபு முடிவு செய்கிறார்.

அந்த மூன்று பேர் யார்? மூன்று பேருக்கும் துணை போகும் அதிகாரிகள் யார் அவர்களை கதாநாயகன் ஆதிக் பாபு கண்டுபிடித்து அவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுத்தார்? என்பதுதான் இந்த ‘குற்றம் புரிந்தால்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த குற்றம் புரிந்தால் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுக நடிகர் ஆதிக் பாபு நடித்திருக்கிறார்

கதாநாயகன் ஆதிக் பாபுவுக்கு முதல் திரைப்படம் போல் இல்லாமல் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

செண்டிமெண்ட் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார்.

இந்த குற்றம் புரிந்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக அர்ச்சனா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா, கதை கருவின் மையப் புள்ளியான  கதாபாத்திரத்தில் மிகவும் அளவான நடிப்பை கொடுத்து கவனத்தை ஈட்டுள்ளார்.

கதாநாயகி அர்ச்சனாவின் தந்தையாகவும், கதாநாயகனின் தாய்மாமாவாகவும் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அனுபவமான நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ‘நாடோடிகள்’ அபிநயா, காவல்துறை உடையில் மிக கம்பீரமாக இருப்பதோடு மிக அழகாகவும் இருக்கிறார்.

அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.

பாடல்களை ரசிக்கும்படி கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் கே.எஸ்.மனோஜ், பின்னணி இசையையும் மிக அளவாக கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கே.கோகுல் கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, அனைத்து காட்சிகளையும் லைவாக படமாக்கியிருக்கிறார்.

பெரும்பாலான காட்சிகளை மக்கள் நிறைந்த பகுதிகளில் திரைப்படம் ஆக்கியது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கும் இயக்குநர் டிஸ்னி.

திரைப்படம் முழுவதையும் லைவ் லொக்கேஷன்களில் திரைப்படமாக்கி வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் டிஸ்னி.

மொத்தத்தில் குற்றம் புரிந்தால் குறையும் இல்லை குற்றமும் இல்லை திரைப்படம் பார்க்கலாம்.