லால் சலாம் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள்:- ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ், ஜீவிதா ராஜசேகர், அனந்திகா சனில்குமார், செந்தில், கே.எஸ். ரவிக்குமார், லிவிங்ஸ்டன், நிரோஷா, தம்பி ராமையா, ஆதித்ய மேனன், விவேக் பிரசன்னா, தங்கதுரை, ‘கிக்காஸ்’ காளி, தன்யா பாலகிருஷ்ணா, மற்றும் பலர். எழுத்து & இயக்கம் :- ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒளிப்பதிவாளர் :- விஷ்ணு ரங்கசாமி. படத்தொகுப்பாளர் :- பி.பிரவின் பாஸ்கர். இசையமைப்பாளர் :- ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான். தயாரிப்பு நிறுவனம் :- லைகா புரொடக்ஷன்ஸ். தயாரிப்பாளர் :- சுபாஸ்கரன். |
மூரார்பாத் என்ற கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கு மொய்தின் பாயாக உருமாறி மும்பையில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார்.
மூரார்பாத் என்ற கிராமத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களும் சகோதரர்களாக காலகாலமாக ஒற்றுமையாக
வாழ்ந்து வருகிறார்கள்.
மொய்தின் பாயின் மகன் மற்றொரு கதாநாயகன் விக்ராந்திற்கும் மொய்தின் பாயின் நண்பரின் மகன் கதாநாயகன் விஷ்ணு விஷாலும் சிறு வயதில் முதல் இருந்தே எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்.
கதாநாயகன் விஷ்ணு விஷால் த்ரீ ஸ்டார் என்ற கிரிக்கெட் அணியில் விளையாடி அடிக்கடி வெற்றி பெற்று வருகிறார்.
ஆனால் ஒரு சில காரணங்களால் கதாநாயகன் விஷ்ணு விஷால் இன்னொரு அணியில் சேர்ந்து விளையாடுகிறார்.
அதன் பின்னர் த்ரீ ஸ்டார் அணி தொடர்ந்து விளையாடும் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் த்ரீ ஸ்டார் அணி வெற்றி பெறுவதற்காக கபில் தேவிடம் பயிற்சி பெற்ற மொய்தீன் பாயின் மகன் மற்றொரு நாயகன் விக்ராந்தை மும்பையில் இருந்து வரவழைத்து அணியில் சேர்க்கின்றனர்.
மற்றொரு கதாநாயகன் விக்ராந்த் விளையாடிய முதல் போட்டியில் த்ரீ ஸ்டார் அணி மீண்டும் தோல்வியை தழுவுகிறது.
இதனால் கதாநாயகன் விஷ்ணு விஷால் அணியினர் இவரை கேலி செய்கின்றனர்.
அதன்பின்னர் மற்றொரு கதாநாயகன் விக்ராந்தின் த்ரீ ஸ்டார் அணி வெற்றி பெறுகிறது.
ஆனால் அந்த வெற்றியை கதாநாயகன் விஷ்ணு விஷால் அணியினர் ஏற்க மறுக்கிறார்கள்.
அரசியல் காரணங்களுக்காக இவர்களை இந்து முஸ்லீம் அந்த கிராமத்தில் ஒற்றுமையாக இருப்பதை பிளவுப்படுத்த நினைப்பவர்கள், அதற்காக அந்த ஊர் இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு பிடித்த கிரிக்கெட் விளையாட்டை பயன்படுத்தி ஊரில் மிகப்பெரிய அளவில் மதக்கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இறுதியில் இந்த கிரிக்கெட்டில் உருவான பிரச்சனை என்ன ஆனது? கதாநாயகன் விஷ்ணு விஷால், மற்றொரு கதாநாயகன் விக்ராந்தின் வெற்றியை ஒப்புக் கொண்டாரா? ஒப்புக்கொள்ளவில்லையா?
இந்த கிரிக்கெட்டில் உருவான மத கலவரத்தை அந்த கிராமத்தில் உள்ளவர்கள் சரி செய்தார்களா?
இதனால், இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு பிரிந்துபோக, பிறகு அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? ஒன்று சேரவில்லையா?,
என்பதுதான் இந்த லால் சலாம் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக பொருந்தி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த லால் சலாம் திரைப்படத்தை தாங்கி பிடித்துள்ளார்.
இந்த லால் சலாம் திரைப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார்.
இந்த லால் சலாம் திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக விக்ராந்த் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் விஷ்ணு விஷால் மற்றும் மற்றொரு கதாநாயகன் விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.
இருவரும் கிரிக்கெட் விளையாடக் கூடியவர்கள் என்பதால் கிரிக்கெட் விளையாட்டில் அசத்தியிருக்கிறார்கள்.
கிரிக்கெட் விளையாட்டு மட்டுமல்லாமல் இருவருமே மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
அதிலும், மற்றொரு கதாநாயகன் நடித்திருக்கும் விக்ராந்தின் உணர்வுப்பூர்வமான நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது.
கதாநாயகன் விஷ்ணு விஷாலுக்கு சில காட்சிகளில் அதிக வாய்ப்புகள் கிடைத்ததும், சில இடங்களில் சரியாக நடிக்க முடியாமல் தடுமாறியிருக்கிறார்
இந்த லால் சலாம் திரைப்படத்தில் கதாநாயகியாக அனந்திகா சனில்குமார் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அனந்திகா சனில்குமாருக்கு திரைப்படத்தில் பெரிய அளவில் வேலை ஒன்றும் இல்லை, ஒரு பாடலுக்கும் சில காட்சிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஊரில் அம்மன் கோயிலில் உள்ள பூசாரி ஆக வரும் செந்தில் மற்றும் ஊரில் உள்ள பெரியவராக வரும் தம்பி ராமையா இருவரும் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் தாயாக நடித்திருக்கும் ஜீவிதா, 30 வருடங்களுக்குப் பிறகு மிக அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக நிரோஷா மிகவும் அருமையாக தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
கொடூர வில்லனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா மிகவும் கொடூரமான கொலைகார பாவியாக நடித்திருக்கிறார்.
மூணார் ரமேஷ், கதாநாயகன் விஷ்ணு விஷாலுக்கு உதவி கரம் நீட்டும் கதாபாத்திரத்தில் வந்து மனதை உருக வைக்கிறார்.
இந்த லால் சலாம் திரைப்படத்தில் தங்கதுரை காமெடியனாக இருந்து குணச்சித்திர நடிகராக மாறி இந்த திரைப்படத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
அமைச்சராக வரும் கே.எஸ். ரவிக்குமார், விஷ்ணு விஷாலின் தந்தையாக வரும் லிவிங்ஸ்டன்,
ஆதித்ய மேனன், மொய்தீன் பாய்க்கு வலது கைகளாக வரும் ‘கிக்காஸ்’ காளி, மற்றும் ஜேகே கொடூரமான வில்லனின் மனைவியாக வரும்
தன்யா பாலகிருஷ்ணா, உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்து இருப்பவர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
1993-ல் நடக்கும் கதை என்பதால் அதற்கு ஏற்ப காட்சிகளை வடிவமைப்பதில் கலை இயக்குனர் அதிகம் மெனக்கெட்டிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உடை உள்ளிட்ட விசயங்களை சத்யா NJ காஸ்டியூம் டிசைனில் மிகவும் நேர்த்தியாக கையாண்டு அனைத்து கதாபாத்திரங்களும் பளிச்சிடுகின்றனர்.
படத்தொகுப்பாளர் பி.பிரவின் பாஸ்கர் படத்தொகுப்பின் மூலம் கொஞ்சம் திரைக்கதையை குழப்பி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமியை பாராட்டியே ஆக வேண்டும்.
1993 காலகட்டத்தை ஒளிப்பதிவின் மூலம் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி கிராமத்தையும், அங்கு நடக்கும் கோவில் திருவிழாவையும் இயல்பாக திரைப்படமாக்கியிருப்பதோடு, கதாநாயகன் விஷ்ணு விஷாலின் ஆக்சன் காட்சியை வித்தியாசமாக திரைப்படமாக்கியிருப்பது ரசிக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசை
பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகவும் அருமையாக கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் அனைத்தும் அருமை.
இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகிறவர்கள் மற்றும் அரசியல் பேசுபவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கும் வசனங்கள் அனைத்தும் கைதட்டல் பெறுவதோடு, மத அரசியல், சாதிய ஆதிக்க அரசியல் சேர்ந்தவர்களுக்கு இந்த லால் சலாம் திரைப்படம் சாட்டையடியாக அமைந்திருக்கிறது.
இந்த இந்து இஸ்லாமியர் கிறிஸ்தவர் கதையை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், பிரமாண்டமாகவும் காட்சி மொழியில் சொல்லியிருந்தால், இந்த லால் சலாம் திரைப்படம் இந்திய திரைப்பட உலகில் மட்டும் இன்றி இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
மதநல்லிணகத்தை பேசுகிறேன் என்று வசனத்தை திணிக்காமல் தேவையான காட்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை.
இந்த திரைப்படத்தில் பல காட்சிகளில் எமோஷனலாக இருக்கும் காட்சிகள் நன்றாக கைகொடுத்துள்ளன.
தற்போது நமது நாட்டில் நிலவி வரும் மத பிரச்சனையை மையமாக வைத்து கதையை இயக்கி இருக்கும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மிகப்பெரிய அளவில் பாராட்டியே ஆக வேண்டும்..
மொத்தத்தில் இந்த லால் சலாம் திரைப்படம் மதத்தை வைத்து சம்பாதிக்கும் மதவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கு காலில் கிடப்பதை கழட்டி அடிப்பது போல் அமைந்திருக்கிறது.