மறக்குமா நெஞ்சம் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5/ 5.
நடிகர் & நடிகைகள் :- ரக்ஷன், மலினா, தீனா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முத்தழகன், மெல்வின் டென்னிஸ், முனிஷ்காந்த், அருண் குரியன் அகிலா, ஆஷிகா காதர், நடாலி லூர்ட்ஸ், விஸ்வத், மற்றும் பலர்
எழுத்து & இயக்கம் :- ரா.கோ. யோகேந்திரன்.
ஒளிப்பதிவாளர் :- கோபி துரைசாமி.
படத்தொகுப்பாளர் :- பாலமுரளி, ஷஷாங்க் மாலி.
இசையமைப்பாளர் :- சச்சின் வாரியர்.
தயாரிப்பு நிறுவனம் :- ஃபிலியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் & குவியம் மீடியாவொர்க்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- ரகு எல்லூரு – ரமேஷ் பஞ்சாங்குலா – ஜனார்தன் சௌத்ரி – ராகோ.யோகேந்திரன்.
ரேட்டிங் :- 3.5/ 5.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2008 ஆம் வருடம் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் பள்ளி வாழ்க்கையை கடந்து கல்லூரி வாழ்க்கையைக் கடந்து அவரவர் வாழ்க்கையில் வெவ்வேறு வேலைக்கு சென்று செட்டில் ஆகி விடுகின்றனர்.
கதாநாயகன் ரக்ஷன் கம்பெனி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இதில் கதாநாயகன் ரக்சன் மற்றும் விஜய் டிவி தீனா நண்பர்களாக இருக்கிறார்கள்.
இதற்கிடையே பத்து வருடங்களுக்கு முன்பு தான் படிக்கும் பள்ளியில் அதே வகுப்பில் படிக்கும் கதாநாயகி மலினாவை ஒரு தலையாக கதாநாயகன் ரக்ஷன் காதலித்து வருகிறார்.
கதாநாயகன் ரக்ஷன்பள்ளி படிக்கும் போது உள்ள காதலை கடந்து வந்த வாழ்க்கையை எண்ணி ஏங்குகிறார்.
2008ல் இவர்கள் அனைவரும் எழுதிய தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி இந்த தேர்வை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் பத்து வருடங்கள் முன்பு படித்த கல்வியாண்டில் தேர்வு எழுதிய கதாநாயகன் ரக்ஷன் மற்றும் அனைத்து மாணவர்கள் எழுதிய தேர்வில் பாஸ் ஆனது செல்லாது என தீர்ப்பு வருகிறது.
அந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்ட மாணவர்கள் அதிர்ச்சியும், ஆனந்தமும் படுகின்றனர்.
இதனால் மீண்டும் பள்ளிக்கு சென்று மூன்று மாத காலம் வகுப்பில் இருந்து படித்து அந்த அனைத்து மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அந்த மாணவர்களின் தேர்ச்சி பாஸ் பண்ணிய கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்றம் கூறுகிறது.
இந்தத் தீர்ப்பு வெளிவந்ததை அடுத்து ஆனந்தமாகும் அவர் எப்படியாவது தன் காதலை இந்த தடவையாவது பள்ளிக்கு சென்று தன் காதலி கதாநாயகி மலினாவிடம் காதலை சொல்லி விட வேண்டும் என பழைய மாணவர்களோடு அவரும் அதே பள்ளிக்கு மீண்டும் பொதுத் தேர்வு எழுத வருகிறார்கள்.
10 வருடங்கள் கழித்து அந்த பள்ளிக்கு வந்த நேரத்தில், தனது காதலியான நாயகி கதாநாயகி மலீனாவை காண்கிறார்.
இந்த காலகட்டத்திலாவது கதாநாயகன் ரக்ஷன் தனது காதலை எப்படியாவது சொல்லியாக வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.
கதாநாயகன் ரக்ஷன் தனது காதலி கதாநாயகி மலீனாவிடம் தன் காதலை கதாநாயகன் ரக்சன் கூறினாரா? காதலை கூறவில்லையா? அந்த காதலை கதாநாயகி மலீனா ஏற்றுக் கொண்டாரா? ஏற்றுக்கொள்ளவில்லையா? என்பதுதான் இந்த மறக்குமா நெஞ்சம் திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்த மறக்குமா நெஞ்சம் திரைப்படத்தில் கதாநாயகனாக ரக்ஷன் நடித்திருக்கிறார்.
இரண்டு காலகட்டத்தை மிக கச்சிதமான நடிப்பை கொடுத்து அதில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஆங்காங்கே நடிப்பில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், முதல் திரைப்படத்திலேயே நிறைய காட்சிகளை நிறைவாகவே கொடுத்ததற்காக கதாநாயகன் ரக்ஷனை மிகப்பெரிய அளவில் பாராட்டலாம்.
இந்த மறக்குமா நெஞ்சம் திரைப்படத்தில் கதாநாயகியாக மலீனா நடித்துள்ளார்.
அழகு தேவதையாக வந்து கத்நாயகி மலீனா. நடிப்பிலும் முடிந்தவரை நன்றாகவே நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.
விஜய் டிவி தீனாவின் காமெடிகள் ஆங்காங்கே ரசிக்க வைத்தது.
விஜய் டிவி தீனாவின் நடிப்பு பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களை நடிப்பை நினைவுபடுத்துகிறது.
ப்ராங் ஸ்டார் ராகுலின் கதாபாத்திரம் திரைப்படத்தில் மிகவும் வலுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வலுவை உணர்ந்து ப்ராங் ஸ்டார் ராகுல் மிகவும் கவனமாகவே தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கையாண்டிருக்கிறார்.
பள்ளியில் பி டி வாத்தியாராக வரும் முனீஸ்காந்த் மற்றும் அவருடைய மனைவியாக வரும் அகிலா இருவருக்குமான காதல் ஒரு கவிதையாக இருந்தது.
இவர்கள் இருவரின் கதாபாத்திரம் திரைப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது.
மற்றபடி இந்த மறக்குமா நெஞ்சம் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து அசத்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமியின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
பள்ளியில் ரசிக்கும்படியான காட்சிகளை ஒளிப்பதிவின் மூலம் கொடுத்த ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமி அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுகள்.
இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை மிகவும் சிறப்பாக இருக்கிறது.
திரைப்படம் பார்க்கும் திரைப்பட ரசிகர்களின் பள்ளி வாழ்க்கையை மீண்டும் நம் கண்முன்னே கொண்டு வந்ததற்கு இயக்குனர் .கோ. யோகேந்திரன் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுகள்.
திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகத்தைக் கொண்டு வந்திருந்தால் மறக்குமா நெஞ்சம் திரைப்படம் தமிழ் திரைப்பட உலகில் நிச்சயம் தடம் பதித்திருக்கும்.
மொத்தத்தில் மறக்குமா நெஞ்சம் நமது பள்ளி வாழ்க்கையில் நடந்த காதல் மற்றும் நினைவுகளை நிச்சயம் தூண்டும் !!