மெமரீஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.5./5.

நடிகர் நடிகைகள் :- வெற்றி, ரமேஷ் திலக், ஹரீஷ் பேரடி, ஆர்.என.ஆர் மனோகர், சஜில், தயானா, பார்வதி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சியாம்-பிரவீன்.

ஒளிப்பதிவு :- ஆர்மோ & கிரண் நுபிடல்.

படத்தொகுப்பு :- சான் லோகேஷ்.

இசை :- கவாஸ்கர் அவினாஷ்.

தயாரிப்பு நிறுவனம் :- ஷிஜுதமீனின் ஃபிலிம் பேக்டரி.

தயாரிப்பாளர்:- ஷிஜுதமீன்ஸ்.

ரேட்டிங் :- 2.5 / 5.

8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு நடிகராக அறிமுகமானார்.

அதன் பிறகு ஜீவி, ஜீவி 2 வனம், ஜோதி, அகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து, தமிழ் திரைப்பட உலகில் நம்பிக்கை நட்சத்திரமாக நடிகர், வெற்றி வளர்ந்து வருகிறார்.

வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள “மெமரீஸ்” எனும் திரைப்படம் சைக்காலஜி த்ரில்லர் கலந்த கதையாக உருவாகியுள்ளது.

மெமரீஸ் என்ற தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியில் தனக்கு தெரிந்த நபர் ஒருவரின் வாழ்வில் மெமரீஸினால் ஏற்பட்ட அனுபவத்தை கதாநாயகன். வெற்றி பகிர்ந்து கொள்கிறார்.

என்பவரின் வாழ்வில்தான் அந்த சம்பவம் என கூறுகிறார். ஃப்ளேஷ் பேக்கில் கதை நகர்கிறது.

மலை சார்ந்த ஒரு காட்டுப்பகுதியில் பாழடைந்த வீட்டில் கதாநாயகன் வெற்றி தலையில் அடிபட்ட கட்டு கட்டப்பட்டுள்ள நிலையில் கண் விழிக்கிறார்.

அவர் அணிந்திருக்கும் சட்டை முழுவதும் ரத்தக்கறை, தான் யார் என்பதே கதாநாயகன் வெற்றிக்கு நினைவில் வரவில்லை. தன்னை வாழ்ந்து வீட்டில் அடைத்து வைத்திருப்பவன் மூலம்தான் தன் இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் கொலைகாரன் என்பதை கதாநாயகன் வெற்றி தெரிந்து காெள்கிறார்.

இதனால், தன்னை அடைத்து வைத்திருக்கும் நபரிடம், “நான் யார், என்னை எதற்காக அடைத்து வைத்திருக்கிறீர்கள் என கதாநாயகன் வெற்றி கேள்வியாய் கேட்கிறார்.

நீ யார் என்பதை 17 மணிநேரத்திற்கள் நீதான் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் அப்படி நீ கண்டுபிடித்த பிறகு நீ உயிருடன் இருக்க மாட்டாய் கூறுகிறான்

அந்த மர்ம நபர் அடர்ந்த காட்டிற்குள் தான் யார் என்பதை தேடி அலையும் கதாநாயகன் வெற்றியை, ஒரு பக்கம் காவல்துறை துரத்துகிறது.

காவல்துறையிடம் இருந்து தப்பிக்கும் கதாநாயகன் வெற்றி துப்பாக்கி முனையில் பிடிக்கும் ஆர்.என்.ஆர் மனோகரிடம் மாட்டிக்கொள்கிறான் ‌

எனது மனைவியை மட்டும்தானே கொலை செய்ய சொன்னேன் எனது மகளை என்ன செய்தாய்? ஆர் என் ஆர் மனோகர் என கேட்கிறார்.

கதாநாயகன் வெற்றிக்கு தன்னை சுற்றி என்னதான் நடக்கிறது? உண்மையிலேயே அந்த கொலைகளை செய்தது அவர்தானா?  அவரை துரத்தும் நபர்களுக்கும் கதாநாயகனுக்கு என்ன தொடர்பு? காவல்துறையிடம் இருந்து செய்த கொலைகளுக்காக கதாநாயகன் வெற்றி சிக்கிக் கொண்டாரா? சிக்கிக் கொள்ளவில்லையா? என்பதுதான் இந்த மெம்ரிஸ திரைப்படத்தின் மீதி கதை.

இந்த மெமரிஸ் திரைப்படத்தில் கதையின் நாயகனாக வெற்றி நடித்திருக்கிறார்.

மெமரிஸ் திரைப்படத்தில் வெற்றி டாக்டராக காவல்துறை அதிகாரியாக காதலனாக அருமையாக நடித்திருக்கிறார்.

தனது நினைவுகளை இழந்து விட்டு தன் கொலைகாரனா? இல்லை நல்லவனா? என்று தெரியாமல் விழி பிதுங்கும் மனிதனாக நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

ரமேஷ் திலக், நண்பன் மற்றும் காவல்துறை அதிகாரி என கதாப்பாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார்.

கதாநாயகியாக களம் இறங்கியுள்ள பார்வதிக்கு பெரிதாக நடிக்க வேண்டிய வேலை இல்லாமல் போய் விடுகிறது.

மனோதத்துவ மருத்துவராக வரும் ஹரிஷ் பேரடியின் மலையாளம் வாசம் வீசும் தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு ஆங்காங்கே முகம் சுளிக்க வைக்கிறது.

மறைந்த நடிகர் ஆர்என்ஆர் மனோகர் நடிப்பு கதாபாத்திரத்தை ஏற்றவாறு உள்ளது.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் அருமையாக நடித்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பாடல் இசை அனைத்தும் அருமை.

பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் ஆர்மோ & கிரண் நுபிடல் ஒளிப்பதிவு அருமை.

படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் படத்தொகுப்பு ஒகே.

மெமரி எரேசிங் மற்றும் மெமரி இன்ஸர்டிங் எனும் ஒரே கான்சப்டை வைத்து ஒரு நல்ல திரைப்படத்தை கொடுக்க இயக்குநர் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள்.

முதல் பாதியில் இருந்த வேகமும் விவேகமும் இரண்டாம் பாதியில் இல்லை.

மொத்தத்தில் மெமரீஸ் திரைப்படம் மிகவும் குழப்பமாக உள்ளது.