Thursday, December 9
Shadow

அகடு திரை விமர்சனம். ரேட்டிங் –2.5 /5.

நடிகர் நடிகைகள் – ஜான் விஜய், சித்தார்த், விஜய் ஆனந்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர், ரவீனா,
மற்றும் பலர்.

தயாரிப்பு – சௌந்தர்யன் பிச்சர்ஸ்.

இயக்கம் –  எஸ்.சுரேஷ் குமார்.

ஒளிப்பதிவு – சாம்ராட்.

படத்தொகுப்பு – தியாகு..

இசை – . ஜான் சிவநேசன்.

திரைப்படம் வெளியான தேதி – 22 அக்டோபர் 2021

ரேட்டிங் –2.5 /5

அகடு என்றால் பொல்லாங்கு என்று அர்த்தம்.

புதுமுக இயக்குனர் எஸ் சுரேஷ் குமார் அகடு திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார்.

முதல் திரைப்படத்திற்கு நல்லதொரு முயற்சி என்றாலும், விடாப்பிடியாக இருந்து கதையின் ஓட்டத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சற்று அதிகமாகவே அனைவரையும்
இந்த அகடு திரைப்படம் கவர்ந்திருக்கும்.

போதை பழக்கம் நட்பையும் கெடுக்கும். கணவன் மனைவி உறவையும் கெடுக்கும் என பாடம் நடத்தியிருக்கிறார்.

சிறுவயதில் இருந்தே ஒன்றாக பள்ளியில் படித்து கல்லூரியில் வளர்ந்த நான்கு இளைஞர்கள் கொடைக்கானலுக்கு ‘ஜாலியாக சுற்றுலா செல்கிறார்கள்.

கொடைக்கானலில் உள்ள ஒரு காட்டேஜில் நான்கு இளைஞர்களும் தங்குகிறார்கள்.

அங்கு இவர்களுக்கு நேர் எதிரேஉள்ள அந்த காட்டேஜில் சுற்றுலா வந்த
ஒரு டாக்டரின் குடும்பம் அவரது மனைவி மற்றும் 12 வயது மகள் ஆகியோர் அங்கு வந்து தங்குகிறார்கள்.

ஒரே நாளில் நான்கு இளைஞர்களுடன் நெருங்கி பழகி விடுகிறாள் அந்த சிறுமி ஷாலினி மற்றும் டாக்டர் ஃபேமிலி நண்பர்களாகி விடுகிறார்கள்.

அன்று இரவே சரக்கு பார்ட்டியில் நான்கு இளைஞர்களுடன் டாக்டரும் பார்ட்டியில் கலந்து கொண்டு சரக்கடிகிறார்.

அனைவரும் மது போதையில் உறங்கி விடுகின்றனர்.

இந்த நிலையில் மறுநாள் காலை டாக்டரின் மகளும் நான்கு இளைஞர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள்.

நண்பர்கள் மீது டாக்டர் சந்தேகப்பட்டு அவர்களின் சட்டையை பிடிக்கிறார்.

அந்த இளைஞர்கள் மிது காவல்துறையில் டாக்டர் புகார் கொடுக்கிறார்.

நண்பர்கள் மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்கின்றனர்.

காணாமல் போனவர்களை இரு தரப்பிலும் காட்டுக்குள் காவல்துறையினரும் தேடிகின்றனர்.

இந்த சூழலில், டாக்டரின் மகளுடன் காணாமல் போன இளைஞர்களில் ஒருவர் காட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

இளைஞர்களில் ஒருவரின் கொலைக்கு யார் காரணம் டாக்டர் மகளை யார் கடத்தியது விசாரணையில் இறங்குகிறார் காவல்துறை அதிகாரியான ஜான் விஜய்.

செக் போஸ்ட்’டில் பணி புரியும் வன துறை பாதுகாவலர் மீதும், காட்டுக்குள் கஞ்சா கடத்தும் முன்று பேர் மீதும் சந்தேகம் ஏற்படுகிறது.

விசாரணையில் அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்பது காவல்துறை அதிகாரி ஜான் விஜய்க்கு
தெரிய வருகிறது.

Read Also  இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் திரை விமர்சனம் ரேட்டிங் –3.5 /5

உண்மையான கொலையாளி யார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த அகடு திரைப்படத்தின் மீதிக்கதை.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய் வழக்கமான செய்யும் அலட்டல்களுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டு, யதார்த்தமான காவல்துறை அதிகாரியாக வலம் வருகிறார்.

காவல்துறை அதிகாரியான ஜான் விஜய் விசாரணை செய்யும் ‘ஸ்டைல்’ புதுசு.

.டாக்டராக வரும் விஜய் ஆனந்த், டாக்டரின் மனைவியாக வரும் அஞ்சலி நாயர் இவர்களுடைய மகளாக வரும் ஷாலினி மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

நான்கு நண்பர்களாக வரும் சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், இன்னும் இருவர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வனத்துறை அதிகாரி நடிப்பு மிரட்டல். அவர்தான் காரணமோ? என பதைபதைக்க வைக்கிறார்

புதுமுக இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.

போதையால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் குமார்.

க்ளைமாக்ஸில் எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்து படத்தை காப்பாற்றி விட்டார்.

சாம்ராட் ஒளிப்பதிவில், மலைகள் சூழ்ந்த காடுகள் கண்களுக்குள் நிற்கின்றன.

இசையமைப்பாளர் ஜான் சிவநேசனின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்த்து இருக்கிறது.

நண்பர்கள் பாடும் பாட்டு ரசிக்க வைக்கிறது. ஆட்டமும் போட வைக்கிறது.

பாடல் வரிகளை கபிலன் எழுதி இருக்கிறார்.

படத்தொகுப்பை தியாகு கவனித்திருக்கிறார்.

திரைப்படத்தின் தலைப்புக்கு என்ன அர்த்தம்? என்று புரியாமல் தியேட்டருக்குள் சென்றால்… ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘அகடு’ கண்டிப்பாக பார்க்கலாம்.

CLOSE
CLOSE