புதியதாக ஒரு காய்கறி தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் வைரலாகும் வீடியோ!.

சென்னை 13 ஜூன் 2021

புதியதாக ஒரு காய்கறி தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் வைரலாகும் வீடியோ.!

கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த நேரத்தில் பிரபல நடிகர் நடிகைகள் அனைவரும் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பதற்காக சிலர் மொட்டை மாடியில் தோட்டம் ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தனது வீட்டில் புதியதாக ஒரு காய்கறி தோட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அந்த காய்கறி தோட்டத்தை அதை நடிகர் சிவகார்த்திகேயனே பராமரித்து வருகிறார்.

இது குறித்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில்
பதிவு செய்துள்ளார்

இந்த காய்கறி தோட்டத்தில் அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை தான் பயிரிட்டிருப்பதாகவும், இன்னும் நிறைய பயிரிட வேண்டும் என்று தனக்கு ஆசை என்றும் அதற்கு இன்னும் கொஞ்சம் நாளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த சிறிய தோட்டத்தை உருவாக்கி இருக்கிறேன்.

இன்னும் பெரிய தோட்டத்தை உருவாக்க இருக்கிறேன்.

அதுதான் என்னுடைய ஆசை என்று கூறி இருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதையடுத்து தொடர்ந்து சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் 5 படங்களில் நடிக்க இருக்கிறார்.

மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் நம்முடைய வாழ்க்கையும் விரைவில் இந்த காய்கறி தோட்டம் போல் பசுமையாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CQBPM4IhyYg/?utm_medium=copy_linkhttps://www.instagram.com/p/CQBPM4IhyYg/?utm_medium=copy_link

https://fb.watch/65kcJUWR3Z/https://www.facebook.com/Sivakarthikeyan.D/videos/870393897022789/?app=fbl