டெல்லியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு.
சென்னை 18 ஜூன் 2021
டெல்லியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக வெற்றி பெற்றதையடுத்து கடந்த மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார்.
தமிழ் நாட்டில் புதிதாக யார் முதல்வராக பதவியேற்றாலும், உடனே டெல்லி சென்று அப்போதைய பாரத பிரதமரைச் சந்தித்து தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து கோரிக்கை வைப்பது ஒரு நடைமுறையாக இருந்துவருகிறது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்ததன் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வது உடனடியாக நடைபெறவில்லை.
ஆகையால் விரைவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் 17 ஆம் தேதி காலையில் தனிவிமானம் மூலம் காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.
அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து காரில் தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்றார்.
பின்னர், அங்கிருந்து டெல்லியின் மின்டோ சாலையில் கட்டப்பட்டுவரும் தி.மு.க அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார்
பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 25 நிமிட சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது.
தமிழ்நாட்டு வளர்ச்சித் திட்டங்கள் சம்பந்தமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
மேலும் முதலமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் பேட்டியில் கூறியதாவது:
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது.
தமிழக முதலமைச்சர் முதல் முறையாக டெல்லி வந்து இருக்கிறேன்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்து இருக்கிறார்.
மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தேன்.
"உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்!" என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் நிலைப்பாடே திமுக அரசின் நிலைப்பாடு! pic.twitter.com/yBNVUDlRM8
— M.K.Stalin (@mkstalin) June 17, 2021
மாண்புமிகு @PMOIndia அவர்களை இன்று புதுதில்லியில் சந்தித்த போது தமிழ்நாட்டின் நீர்வளம்- கல்வி- சுகாதாரம்- தொழில் – வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகள் சார்ந்த கோரிக்கைகளுடன், #NEET, #CAA, #EIA, எட்டுவழிச்சாலை ரத்து என ஒன்றிய – மாநில நலன் மற்றும் உரிமைகளையும் கோரிக்கைகளாக முன்வைத்தேன். pic.twitter.com/NYbjVp9rII
— M.K.Stalin (@mkstalin) June 17, 2021