பாரத ரத்னா’ பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் காலமானார்.

சென்னை 06 பிப்ரவரி 2022 ‘பாரத ரத்னா’ பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் காலமானார்.

இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வென்ற பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை 8.12 மணியளவில் காலமானார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்ட இவர் மும்பையில் உள்ள தனியார்
ப்ரீச் கேண்டி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

இவருக்கு தற்போது 92 வயதாகிறது.

ஜனவரி 8 ம் தேதி மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பல நாட்களாக ஐசியு.,வில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்.

பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பாரத ரத்னா’ பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பற்றி சில தகவல்கள்…

அவருடைய 4 வயதில் பாடல்களை பாடத் தொடங்கிய இவர் சுமார் 20 மொழிகளில் பாடியிருக்கிறார்.

எனவே இவர் இந்திய இசை ரசிகர்களால் “இசைக் குயில்” எனவும் அழைக்கப்படுகிறார்.

பிரபல பாலிவுட் பாடகி ஆஷா போன்ஸ்லே அவர்களின் சகோதரி ஆவார்.

இந்தியாவின் மிக உயரிய விருதான

“பாரத ரத்னா விருது”.

“பத்ம பூஷன் விருது”.

“பத்ம விபூஷன்”.

விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது.

தாதாசாகேப் பால்கே விருது.

நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள் என மேலும் பல விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தன் இசையால் இந்தியர்களை கட்டிப் போட்டுள்ளார்.

1929 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் நாள் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள “இந்தூர்” என்ற ஊரில் பிறந்தார்.

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தந்தை ஒரு கிளாசிக்கல் பாடகர் மற்றம் நாடக கலைஞராகவும் இருந்தார்.

இதனால் தன்னுடைய ஐந்து வயதிலேயே தந்தையிடம் இசைப் பயிலத் தொடங்கினார்.

பிறகு, புகழ் பெற்ற அமான் அலி கான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோரின் கீழ் இசைப்பயிற்சி மேற்கொண்டார்.

1942 ஆம் ஆண்டு திரைப்பட  துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார்.

அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான பண நெருக்கடிக்கு உள்ளாகி குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளானார்கள்.

அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார்.

இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரும் புகழை தேடித் தந்தது.

1942 முதல் திரைப்பட துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், இளையராஜா மற்றும் ஏ.ஆர் ரகுமான், உள்ளிட்ட இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

முக்கியமான சில திரைப்படங்கள்.

‘சஜா’ (1951).
‘பைஜு பவ்ரா’ (1952).
‘ஆக் ஆஹ்’ (1953).
‘ஸ்ரீ 420’ (1955).
‘தேவதாஸ்’ (1955).
‘கதவு எண் 44’ (1955).
‘சோரி சோரி’ (1956).
‘முகல் ஆஸம்’ (1960).
‘கோஹினூர்’ (1960).
‘சோடே நவாப்’ (1961).
‘பரஸ்மணி’ (1963).
‘பூத் பங்களா’ (1965).
‘பட்னி பட்னி’ (1966) ‘அபிலாஷா’ (1969). ‘கேரவன்’ (1971).
‘காதி பதங்’ (1971).
‘அமர் பிரேம்’ (1972). ‘ஆன்ந்தி’ (1975). ‘சாந்தினி’ (1989). ‘லம்ஹே’ (1991).
‘தர்’ (1993).
‘யேஹ் தில்லகி’ (1994). ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (1995).
‘ஹை தலாக் தில்’ (1997) ‘மொகபத்தீன்’ (2000).
‘முஜ்சே ரோஸ்ட்டி கரோகே’ (2002).
‘சாரா’ (2004).
‘தில் சே’ (1998).
‘ஒன் 2 க 4 ‘ (2001). ‘புகார்’ (2000). ‘ஜுபைதா’ (2001).
‘ரங் தே பசந்தி (2006). ‘லகான்’ (2001).
‘அனார்கலி’.
‘அல்பேலா’,‘ஆஷா’, ‘அடாலட்’, ‘ரயில் மேடை’, ‘சாச்சா ஜிந்தாபாத்’ போன்ற திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் பலரையும் கவர்ந்தது எனலாம்.

தமிழ் திரைப்பட உலகில் இவர் பாடிய “வலையோசை கல.. கலவென….” (கமல் நடித்த சத்யா படம்) பாடல் இன்றவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

1958 ஆம் ஆண்டு சலீம் சவுத்ரி இசையமைத்து வெளிவந்த “மதுமதி” என்ற திரைப்படத்தில், இவர் பாடிய “ஆஜா ரெ பரதேசி” என்ற பாடல், இவருக்கு முதல் ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது.

பிறகு, 1961 ல் ஹேமந்த் குமார் இசையமைத்த “பீஸ் சால் பாத்” திரைப்படத்தில் “கஹின் தீப் ஜலே கஹின் தில்” என்ற பாடல் இவருக்கு இரண்டாவது ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது.

1973 ஆம் ஆண்டு, ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படதில் இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் சிறந்த பின்னனி பாடகருக்கான முதல் “தேசிய விருதை” பெற்றுத்தந்தது.

லதா அவர்கள், 1970 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திரைப்படம் சாராத சில ஆல்பங்களையும் வெளியிட்டார்.

காலிப் கஜல், மராத்திய நாட்டுப்புற இசையில் ஒரு ஆல்பமும், சாந் துக்காராம் பற்றிய “அபாங்க்ஸ்” என்ற ஆல்பமும் இதில் அடங்கும்.

தயாரிப்பு மற்றும் இசைத் துறையில் ஈடுபாடு

ஒரு பின்னணி பாடகராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியுள்ளார். 1953 ஆம் ஆண்டு “வாடல்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். பிறகு, அதே ஆண்டு சி. ராமச்சந்திராவுன் இணைந்து ‘ஜஹாஞ்ச்கார்’, ‘காஞ்சன்’ (1955) மற்றும் ‘லேகின்’ (1990) என்ற இந்தித் திரைப்படத்தையும் வெளியிட்டார்.

மகராஷ்டிர மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை “சதி மனசே” என்ற திரைப்படத்திற்காகவும், “ஐராநிச்ய தேவா துலா” என்ற பாடலுக்காக சிறந்த பாடகர் விருதையும் பெற்றார். 1960ல் “ராம் ராம் பவ்ஹான” என்ற திரைப்படத்தின் மூலம் இசையாமைப்பாளராக கால்பதித்த அவர், 1963ல் ‘மராத்தா டிட்டுகா மேல்வாவ’ மற்றும் ‘மொஹித்யஞ்சி மஞ்சுளா’, ‘சதி மானசே’ (1965), ‘தம்படி மதி’ (1969) போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசால் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையினை புனேவில் நிறுவினார்.
விருதுகளும் அங்கீகாரங்களும்

1969 ஆம் ஆண்டு “பத்ம பூஷன் விருது” வழங்கப்பட்டது.
• 1972 ஆம் ஆண்டு பீட்டி நா பிடாய் ரெய்னா (பரிஜாய்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
• 1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக பாடல்களை பாடியதற்காக “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார்.
• 1975 ஆம் ஆண்டு ரூதே ரூதே பியா (கோரா காகஸ்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
• 1989 ஆம் ஆண்டு “தாதா சாஹேப் பால்கே விருது” வழங்கப்பட்டது.
• 1990 ஆம் ஆண்டு யாரா சீலி சீலி (லேகின்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
• 1993 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது.
• 1996 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது.
• 1997 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது.
• 1999 ஆம் ஆண்டு “பத்ம விபூஷன் விருது” வழங்கப்பட்டது.
• 1999 ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினிமா விருது.
• 2000 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள ஐ.ஐ.எப்.ஏ மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது.
• 2001 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்ட மற்றும் ஸ்டார்டஸ்ட் இதழ் மூலமாக சிறந்த பின்னனி பாடகருக்கான மில்லேனியம் விருது வழங்கப்பட்டது.
• 2001 ஆம் ஆண்டு “நூர்ஜஹான் விருது” வழங்கப்பட்டது.
• 2001 ஆம் ஆண்டு “மகாராஷ்டிரா ரத்னா விருது” வழங்கப்பட்டது.
• 2001 ஆம் ஆண்டு “பாரத் ரத்னா விருது” வழங்கப்பட்டது.
• ஆஜா ரெ பர்தேசி (மதுமதி 1958), கஹி தீப் ஜலே கஹி தில் (பீஸ் சால் பாத் 1962), தும்ஹீ மேரே மந்திர் தும்ஹீ மெரி (க்ஹண்ட 1965), ஆப் முஜிகே அசே லக்னே லகே (ஜீனே கி ராஹ் 1968), தீதி தேரா தீவார் தீவானா (ஹம் ஆப்கே ஹே ஹைன் கோன் 1994) போன்ற பாடலுக்காக ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது