பன்றிக்கு நன்றி சொல்லி திரை விமர்சனம் ரேட்டிங் – 2.75/5

நடிகர் நடிகைகள்  – நிஷாந்த், அம்ரிதா, விஜய் சத்யா, பாலாஜி ரத்னம், ஜோ மல்லூரி, செல்லா, வியன், பாஸ்கர், ஆட்டோ சந்திரன், மற்றும் பலர்.

இயக்கம் – பாலா அரண்.

ஒளிப்பதிவு – விக்னேஷ் செல்வராஜ்.

படத்தொகுப்பு – ராம சதீஷ்.

இசை – சுரேன் விகாஷ்.

தயாரிப்பு – ஹெட் மீடியா ஒர்க்ஸ்.

ரேட்டிங் – 2.75/5

திரைப்பட துறையினர் டிஜிட்டலுக்கு மாறிய பின் பல புது புது இயக்குனர்கள் அடிக்கடி திரைப்பட உலகிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

விதவிதமான கதைகளுடன் நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் புதுமுகங்களை வைத்து கூட ஓரளவிற்கு தரமான படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

திரைப்பட உலகில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு கதை எழுதி வைத்து கொண்டு பல தயாரிப்பாளரை தேடி வருகிறார் கதாநாயகன் நிஷாந்த்.

இவரிடம் தயாரிப்பாளர் ஒருவர் கதையை தனக்கு நல்ல தொகைக்கு தருகிறேன் எனது கதையை விற்கும்படி கேட்கிறார் அந்த தயாரிப்பாளர்.

அதற்கு ஒப்புக்கொள்ளாத கதாநாயகன் நிஷாந்த் வேறு தயாரிப்பாளரை தேடி வருகிறார்.

பல்லாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த சிறிய பஞ்சலோக பன்றி சிலை ஒன்று சீன தேசத்தில் இருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது.

பஞ்சலோக பன்றி வடிவ சிலையை கடத்துவதற்காக ஒரு ரவுடி கும்பல் மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்கள் ஆகியோர் அந்த சிலையை தேடி வருகிறார்கள்.

அதை ஒரு தொல்லியல் துறை ஆய்வாளர் கண்டுபிடித்து எடுத்துச் செல்கிறார்.

அவர்களிடமிருந்து இரண்டு இளைஞர்கள் அதைத் திருடிச் செல்கிறார்கள்.

அவர்கள் அதை ஒரு இடத்தில் ஒளித்து வைக்கிறார்கள்.

பின்னர் அவர்களும் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள்.

அந்த சிலை பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொண்ட ரவுடி விஜய் சத்யா, போலீஸ் அதிகாரி பாலாஜி ரத்தினம் பன்றி சிலையைக் கைப்பற்றப் போட்டி போடுகிறார்கள்.

இந்த கும்பலிடம் கதாநாயகன் நிஷாந்த் சிக்கிக் கொள்கிறார்.
இறுதியில் இந்த கும்பலில் இருந்து நாயகன் தப்பித்தாரா? இல்லையா?சிலை கிடைத்ததா? இல்லையா ? என்பதுதான் இநத பன்றிக்கு நன்றி சொல்லி
திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பன்றிக்கு நன்றி சொல்லி
திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிஷாந்த், விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம், செல்லா, வியன் மற்றும் பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் எந்த குறையும் இல்லை. கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

இந்தக் காலத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லாத ஒரு திரைப்படமா என ஆச்சரியப்பட வைத்துள்ளார்கள் அறிமுக இயக்குனர் பாலா அரண்.

கிரைம் காமெடியில் எழுதப்பட்ட கதையை, சுவாரசியமான திரைக்கதையின் மூலம் சற்று கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குனர் பாலா அரன்.

குறிப்பாக அந்த பாழடைந்த கம்பெனி.

அனைவருடனும் ஓடி ஓடியே படமாக்கியிருப்பார் போலிருக்கிறது ஒளிப்பதிவாளர் விக்னேஷ்

விக்னேஷ் செல்வராஜின் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் மட்டுமே ஈர்க்கிறது.

செல்வராஜ். பின்னணி இசையிலும், ‘பன்றிக்கு’ பாடலிலும் இசையமைப்பாளர் சுரேன் விகாஷ் உழைப்பு திரைப்படத்தில் தெரிகிறது.

எடிட்டர்கள் ராம், சதீஷ் இருவரும் திரைப்படத்தை இழுக்காமல் தேவையானவற்றை மட்டும் வைத்து கொண்டு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்படம் சிறப்பு.