நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – செந்தமிழன் சீமான் செய்தியாளர் சந்திப்பு பத்திரிக்கையாளர் மன்றம் | சென்னை (சேப்பாக்கம்) | நாம் தமிழர் கட்சி.

சென்னை 08 பிப்ரவரி 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – செந்தமிழன் சீமான் செய்தியாளர் சந்திப்பு பத்திரிக்கையாளர் மன்றம் | சென்னை (சேப்பாக்கம்) | நாம் தமிழர் கட்சி.

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காண்கிறது.

தமிழ்நாடு முழுவதும் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மேற் கொள்ளவிருக்கும் தொடர் பரப்புரை குறித்தும், நகர்ப்புறத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும் செய்தியாளர்கள் வாயிலாக மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நாளை 08-02-2022 செவ்வாய்க்கிழமை, காலை 11 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சிறப்புச் செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.