சீதா ராமம் திரை விமர்சனம் ரேட்டிங்:-4.5 / 5

நடிகர் நடிகைகள் :-  துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், யெர்லகட்டா சுமந்த் குமார், ரஷ்மிகா மந்தானா, பிரகாஷ்ராஜ், சச்சின் கடேகர், பூமிகா சாவ்லா, ரோகிணி, ராகுல் ரவீந்திரன், கௌதம் வாசுதேவ் மேனன், வெண்ணிலா கிஷோர், தருண் பாஸ்கர், சுனில்,முரளி ஷர்மா
மற்றும் பலர்.

இயக்கம் :- ஹனு ராகவபுடி.

ஒளிப்பதிவு :- பி எஸ் வினோத் & ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.

படத்தொகுப்பு :- கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்.

இசை :- விஷால் சந்திரசேகர்.

தயாரிப்பு :- வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா.

ரேட்டிங் :- 4.5 / 5.

தெலுங்கு திரைப்பட உலகில் உருவான ஒரு நல்ல திரைப்படத்தை தமிழ் திரைப்பட ரசிகர்கள் ரசிக்கும் படியாக ஒரு நேரடித் தமிழ் திரைப்படம் போலவே உருவாக்கி இருக்கிறார்கள்.

திரைப்பட உலகில் அழகான காதல் கதை, நீண்ட காலம் இடைவெளிக்குப் பிறகு மனம் கவர்ந்த காதல் திரைப்படம் சீதா ராமம்.

தமிழ் திரைப்பட உலகில் எப்போதாவது ஒரு முறைதான் புல்மேல் விழும் பனி துளி போல நமது இதயத்தைத் வருடும் திரைப்படங்கள் வருவதுண்டு.

அந்த வரிசையில் இந்த வாரம் சீதா ராமம் இதயத்தைத் வருடும் அருமையான திரைப்படம்

பலரும் பலவிதமாக தங்கள் மனம் கவர்ந்த காதல் திரைப்படங்களை பற்றிக் குறிப்பிடுவார்கள்.

அப்படி பாராட்டும்படியான ஒரு திரைப்படம்தான் இந்த ‘சீதா ராமம்’.

வசனங்கள், மற்றும் பாடல்கள் இது ஒரு மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் என்ற உணர்வை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சிறிதும் ஏற்படுத்தவில்லை.

அனைத்து காட்சிகளிலும் உதட்டசைவும், மற்றும் வசனங்களும் கூட அவ்வளவு பொருத்தமாய் அமைந்திருக்கிறது.

சமீப காலங்களில் பிரம்மாண்டத்தின் மூலமே ரசிகர்களைக் கவர்ந்த சில தெலுங்கு திரைப்பட உலகில் உள்ள இயக்குனர்களுக்கு தனது கதையை சொல்லுவது மூலம் அவர்களை விடவும் உயர்ந்து நிற்கிறார் இயக்குனர் ஹனு ராகவபுடி.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரிகேடியரான சச்சின் கடேகர், மறைவுக்கு முன்பாக ஒரு கடிதம் மற்றும் ஒரு பெட்டகத்தையும் இந்தியாவில் உள்ள கதாநாயகி மிருணாள் தாகூர் (சீதா மகாலட்சுமி) என்ற பெண்ணிடம் சென்று கொடுக்கும்படி சொன்னதால் அவருடைய பேத்தி ராஷ்மிகா மந்தானா அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு இந்தியாவிற்கு நண்பர் ஒருவர் உதவியுடன் செல்கிறார்.

முகவரியே இல்லாத யார் அந்த (சீதா மகாலட்சுமி) கதாநாயகி மிருணாள் தாகூரை ராஷ்மிகா மந்தானா தேட ஆரம்பிக்கிறார்.

தேடும் பயணத்தில் (சீதா மகாலட்சுமிக்கும் ) கதாநாயகி மிருணாள் தாக்கூர் இந்திய ராணுவ லெப்டினன்ட் ( ராமனுக்கும் ) கதாநாயகன் துல்கர் சல்மான் இடையிலான இருபது வருடங்களுக்கு முன் மலர்ந்த காதலைப் பற்றி ராஷ்மிகா மந்தானா தெரிந்து கொள்கிறார்.

தனது தாத்தாவின் ஆசைப்படி சிதா மகாலட்சுமி ராமிடம் அந்த கடிதத்தை சேர்த்தாரா? சேர்க்கவில்லையா? கதாநாயகன் துல்கர் சல்மானை இந்திய ராணுவம் தேடி கண்டு பிடித்தார்களா?  கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த சிதா ராமம் திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த சீதா ராமம் திரைப்படத்தில் கதையின் நாயகனாக துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.

தனது காதலியை தேடும் காதலனாக நடிப்பு அருமை என சொல்ல வைத்திருக்கிறார் கதாநாயகன் துல்கர் சல்மான்.

காதலில் விழுந்த ஒரு மனிதன் எப்படியெல்லாம் மாறிப் போவான் என்பதை அப்படியே நமது கண் முன்னே காட்டியிருக்கிறார் கதாநாயகன் துல்கர் சால்மன்.

மலையாள திரைப்பட துறையில் உள்ள கதாநாயகர்களுக்கு ஒரு தனி திறமை இருக்கிறது.

எந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்களோ, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தங்களை அப்படியே மாற்றிக் கொள்வார்கள்.

இந்தப் திரைப்படத்தில் ராம் என்ற லெப்டினென்ட்டாக  கதாபாத்திரத்தில் கதாநாயகன் துல்கர் சால்மனின் நடிப்பில் ஒரு துள்ளல் திரைப்படம் முழுவதும் இருக்கிறது.

இந்த சீதா ராமம் திரைப்படத்தில் கதையின் நாயகியாக மிருணாள் தாக்கூர் மிகவும் இளமை துள்ளலுடன் நடித்துள்ளார்.

(சீதா மகாலட்சுமி) ஐதராபாத் இளவரசி நூர்ஜகான் கதாபாத்திரத்தில் மிக அருமையாக பொருந்தி இருக்கிறார் மிருணாள் தாக்கூர்.

இந்த சீதா ராமம் திரைப்படத்தில் மற்றொரு கதையின் நாயகியாக ரஷ்மிகா மந்தானா நடித்திருக்கிறார்.

திரைப்படத்தில் மற்றொரு கதையின் நாயகியாக நடிப்பதற்கு கண்டிப்பாக மிக பெரிய தைரியம் வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தானா.

இருந்தாலும் திரைப்படத்தின் கதையை தெளிவாக நகர்த்தி போவதில் ராஷ்மிகா மந்தானா கதாபாத்திரத்திற்குப் மிகப்பெரிய பங்குண்டு.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஒரு சில காட்சிகளாக இருந்தாலும் முக்கியமான பெரிய நடிகர்களையே நடிக்க வைத்திருக்கிறார்கள்.

பிரிகேடியர் ஆக பிரகாஷ்ராஜ், மேஜர் ஆக கவுதம் வாசுதேவன் மேனன் இருவருடைய நடிப்பு மிகப்பெரிய பலம்.

கதாநாயகன் துல்கர் சல்மான் மீது அடிக்கடி வெறுப்பு காட்டும் சக  அதிகாரியாக சுமந்த் நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மிக அருமையாக ரசிக்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர்கள் பி எஸ் வினோத் & ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இவர்களுடைய ஒழிப்பது திரைப்படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் வினோத், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா காஷ்மீரை மிக அருமையாக காண்பித்து இருக்கிறார்.

கலை இயக்குனர் வைஷ்ணவி ரெட்டி, பைசல் அலிகான் ஆகியோர் 65 மற்றும் 85 அந்தந்தக் கால கட்டங்களுக்கே நம்மை அழைத்துச் செல்கிறார் கலை இயக்குனர்.

படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் மிக மிக அருமை.

கதையில் மற்றும் திரைக் கதையில் மட்டுமே கவனம் செலுத்தாமல்,  காட்சி யமைப்புகளில், கதாபாத்திரங்களில், அதற்கான தேர்வுகளில் என அனைத்திலும் தனி கவனம் செலுத்தி ஒரு அற்புதமான காதல் காவியத்தை எப்படி உருவாக்க வேண்டும் என பலருக்கும் பாடமாக இருக்கும்படியாக இந்தத் சீதா ராமம் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹனு ராகவபுடி.

1965களில் நடக்கும் கதையாகவும் 1985களில் நடக்கும் கதையாகவும் 65 மற்றும் 85 அந்தந்தக் கால கட்டங்களுக்கே நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளார் இயக்குனர் ஹனு ராகவபுடி.

மொத்தத்தில் சீதாராமம் திரைப்படம் ஒரு அருமையான காதல் காவியம்.