மக்கள் செல்வன் விஜய் சேதுபதி யின் திரைப்படம் நேரடியாக OTTயில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறதுு.

சென்னை 28 மே 2021

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி யின் திரைப்படம் நேரடியாக OTTயில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அனைத்து திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படத்தை OTTயில் நேரடியாக வெளியிட உள்ளார்களாம்.

.கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த திரைப்படங்களை OTT தளத்தில் நேரடியாக வெளியிட முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் அடுத்த மாதம் OTTயில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

இதுபோல் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், நடிகை திரிஷாவின் ராங்கி ஆகிய திரைப்படங்களை OTTயில் நேரடியாக வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

இந்த வரிசையில் தற்போது மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ திரைப்படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், நடிகர் விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி திரைப்படத்தை OTT-யில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த கடைசி விவசாயி திரைப்படத்தை மணிகண்டன் இயக்கி இருக்கிறார்.

இப்படத்திற்கு அயனகா போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.