நடிகை டாப்சி நடிக்கும் “சபாஷ் மித்து” திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை 09 மார்ச் 2022 நடிகை டாப்சி நடிக்கும் “சபாஷ் மித்து” திரைப் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை டாப்சி பன்னு நடித்திருக்கும் “சபாஷ் மித்து” திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரைப்பட உலகில் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை டாப்சி, பன்னு தொடர்ந்து தமிழில் ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை டாப்சி பன்னுக்கு இந்தியில் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்.
இவர் கைவசம் தற்போது இந்தியில் பல திரைப்படங்கள் இருக்கின்றன.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தை ‘சபாஷ் மித்து’ என்ற பெயரில் இயக்குனர் ஸ்ரீஜித் முக்கர்ஜி இயக்கி வருகிறார்.
இதில் மித்தாலி ராஜாக நடிகை டாப்சி பன்னு நடித்து வரும் நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.