‘லிப்ட்’ திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளி வருகிறதா? படக்குழுவினர் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

சென்னை 28 மே 2021

‘லிப்ட்’ திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளி வருகிறதா? படக்குழுவினர் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கவின் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் நேரடியாக OTTயில் நேரடியாக வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் அதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கவின் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லிப்ட்’. இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வந்தன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை மிக அதிகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விப்ட் திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட பட உள்ளதாக தகவல் பரவி வந்தன.

இந்த திரைப்படத்தின் தமிழகத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ரவீந்திரன் சந்திரசேகர் கைப்பற்றியுள்ளனர்

இந்த நிலையில், ‘லிப்ட்’ நிரைப்படத்தின் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர்
கூறியதாவது…

“லிப்ட் திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

ஜூன் 20-ம் தேதிக்கு மேல் சூழ்நிலையைப் பார்த்துவிட்டு தியேட்டரில் வெளியிடக் கூடிய சூழல் இல்லை என்றால் மட்டுமே ஓடிடியில் வெளியாகும்.

ஆனால், ‘லிப்ட்’ தியேட்டருக்கான படம் தான்” என்று லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்