நடிகர் அஜித்குமார் 62-வது திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சென்னை 19 மார்ச் 2022 நடிகர் அஜித்குமார் 62-வது திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் உருவாக இருக்கும் AK 62 திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் அஜீத்குமாரின் AK62-வது திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

நடிகர் அஜீத் குமாரின் 60-வது திரைப்படமான வலிமை சமீபத்தில்தான் வெளியானது.

இதற்கடுத்து அஜீத் குமாரின் 61-வது திரைப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.

வலிமை திரைப்படத்தை இயக்கிய பிறகு ஹெச்.வினோத் இந்த AK 61 திரைப்படத்தையும் இயக்கவிருக்கிறார்.

நடிகர் அஜித்குமார் நடிக்கும் AK 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது.

இதற்கிடையில் அஜீத் குமாரின் 62-வது திரைப்படம் AK 62 பற்றிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது

இந்த AK 62 திரைப்படத்தை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்த AK 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கும் என்று லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இநத AK62 திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாகவும், அடுத்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இநத AK 62 திரைப்படத்தை வெளியிட இருப்பதாகவும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

இதை அஜித்குமாரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்