சினிமா மீடியேட்டர்ஸ் சங்க உறுப்பினர்களுக்கு உதவிய நடிகர் தயாரிப்பாளர். உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

சென்னை 26 ஜூன் 2021

சினிமா மீடியேட்டர்ஸ் சங்க உறுப்பினர்களுக்கு உதவிய நடிகர் தயாரிப்பாளர். உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

தமழகத்தில் 234 தொகுதிகளிலும் நடந்து முடிந்த தேர்தலில் நடிகரும் தயாரிப்பாளரும் ஆன உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றி என்று கேள்விப்பட்டதில் இருந்து அந்த தொகுதி மக்களுக்கு இரவும் பகலும் ஒடியடி நற்பணிகளை செய்து வருகிறார்கள்.

இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அவரை தனது வீட்டு பிள்ளையாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இருந்தும் சினிமாவை மறக்காமல் சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளை அப்ப நேரடியாக கலத்தில் இறங்கி பார்த்து வருகிறார்.

அதன் அடிப்படையில் சினிமா மீடியேட்டர்ஸ் சங்க உறப்பினர்களுக்கு இன்று தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக உதவினார்

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர்  திரு. M.செண்பகமூர்த்தி அவர்களும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா அவர்களும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி E.ஆறுமுகம் அவர்களும்
இன்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகத்தில் திரையரங்கு பிரதிநிதிகள் மற்றும் All Movie Mediators Association உறுப்பினர்கள் 300 நபர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.