பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் இன்று காலமானார்.

சென்னை 27 ஜூன் 2021

பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் இன்று காலமானார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் கலை இயக்குனருமான அங்கமுத்து அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர்கள் கே.ஆர், ஆர்.கே. செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் கலை இயக்குநர் அங்கமுத்து சண்முகம்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி கதாநாயகர்கள் படங்களிலும் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் இவர்.

கலை இயக்குனர்கள் சங்கத்தில் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் தொடர்ந்து மூன்று முறை தேர்வாகி பணிபுரிந்து வந்தார்.

புற்றுநோயின் பாதிப்பில் இருந்த அவர் இன்று (27.06.2021) காலமானார்.

அவரது உடல் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முகவரி
எண் : 32/52
குமரப்ப முதலி தெரு
துங்கம்பாக்கம்
சென்னை 600034-ல் உள்ள
அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை (28.06.2021)
அவரது உடல் 12 மணியளவில நல்லடக்கம் செய்யப்படும்
என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்பு எண் :-
வெங்கட் 9382876019