மன்மத லீலை திரைப்படம் தடங்கலுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு காரணம்.?

சென்னை 01 ஏப்ரல் 2022 மன்மத லீலை திரைப்படம் தடங்கலுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு காரணம்.?

இன்று வெள்ளிக்கிழமை ஏப்ரல் மாதம் 1ம் தேதி “செல்ஃபி, மன்மத லீலை, இடியட், பூ சாண்டி வரான்” ஆகிய நான்கு திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் செல்ஃபி, ‘மன்மத லீலை, இடியட்’ ஆகிய திரைப்படங்களுக்கு காலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

அதன்படி காலை 8 மணி காட்சி மற்றும் காலை 8.30 மணி ஆகிய காட்சிகளுக்கான முன்பதிவும் நடைபெற்றது.

இந்த நிலையில் மன்மதலீலை திரைப்படத்தின் இரண்டு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது.

‘மன்மத லீலை’ திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் இடையில் ஏற்பட்ட சிக்கல்தான் காரணம் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தைத் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனம் பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் இயக்குநர் வெங்கட் பிரபு முதல் பிரதி அடிப்படையில் தயாரித்துள்ளார்.

ஆனால் அவரின் செலவு செய்த தொகையை திரைப்படத்தின் தயாரிப்பாளர் தரவில்லை என்பதால் பணத்தைக் கொடுத்த பின்னரே திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்.

இயக்குனர் வெங்கட் பிரபு சொன்னதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இவர்களின் இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் மதியக் காட்சிகள் வெளியானது.