குக் வித் கோமாளி புகழ் நடிகர் அஷ்வின் – நடிகர் புகழ் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்துள்ளனர்.
சென்னை 29 ஜூன் 2021
குக் வித் கோமாளி புகழ் நடிகர் அஷ்வின் – நடிகர் புகழ் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்துள்ளனர்.
நடிகர் அஷ்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில், இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வினும், புகழும் இணைந்து புதிய திரைப்படமொன்றில் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் நடிகர் அஷ்வின் கதாநாயகனாகவும், புகழ் காமெடியனாகவும் நடிக்கின்றனர்.
விளம்பர திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் ஹரிஹரன் இந்த என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்த என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.
இந்த என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இந்த திரைப்படம், காதல், காமெடி கலந்து உருவாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 19-ந் தேதி சென்னையில் ஆரம்பிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.