சென்னை அப்போலோ மருத்துவமனை, 93 வயதான நோயாளிக்கு ரோபோட்டிக் உதவியுடன் இதய அறுவை மேற்கொண்டுள்ளது!!
சென்னை 13 ஏப்ரல் 2022 சென்னை அப்போலோ மருத்துவமனை, 93 வயதான நோயாளிக்கு ரோபோட்டிக் உதவியுடன் இதய அறுவை மேற்கொண்டுள்ளது!!
- அதிக வயதுள்ள நோயாளிக்கு இந்த முறையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த இந்தியாவின் முதல் மருத்துவமனை என்ற பெருமையை சென்னை அப்போலோ மருத்துவமனை பெற்றுள்ளது
சென்னை, ஏப்ரல் 12, 2022: அப்போலோ மருத்துவமனை, சென்னை கிரீம்ஸ் சாலையில், ரோபோட்டிக் உதவியுடன் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அதன் சிறப்புப் பிரிவில், மிக அதிக வயதுடைய நோயாளிக்கு (93 வயது) ரோபோட்டிக் உதவியுடனான இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. 93 வயது நோயாளிக்கு இந்த சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்படுவது இந்தியாவிலேயே இதுவே முதல் முறையாகும். அந்த நோயாளிக்கு ரோபோ உதவியுடனான குறைந்தபட்ச ஊடுருவல் கரோனரி தமனி மாற்றுப்பாதை ஒட்டு (ரோபோடிக் அசிஸ்டட் மினிமல்லி இன்வேசிவ் கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்ட் –சிஏபிஜி- Coronary Artery Bypass Graft -CABG) அறுவை சிகிச்சை செய்து டாக்டர் எம்.எம்.யூசுஃப் மற்றும் குழுவினர் ஒரு சாதனை மைல் கல்லை எட்டியுள்ளனர். இந்தக் குழுவினர் 70 வயதுக்கு மேற்பட்ட பல நோயாளிகளுக்கு சிக்கலான ரோபோ-உதவியுடனான குறைந்தபட்ச ஊடுருவல் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது.
கோவிட் தொற்றுநோய் பாதிப்புக் காலத்தின் போதுகூட, அப்போலோ மருத்துவமனை ரோபோடிக் உதவியுடனான குறைந்தபட்ச ஊடுருவல் கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்ட் (சிஏபிஜி) சிகிச்சையைச் செய்து உயிர்களைக் காப்பாற்றுவதில் முன்னணியில் உள்ளது. 93 வயதான ஒருவருக்கு ரோபோ சிஏபிஜி அறுவை சிகிச்சை செய்திருப்பதன் மூலம் இன்றுவரை இந்தியாவில் இந்த சிகிச்சை செய்யப்பட்டவர்களில் மிக வயதான நோயாளியாக அவர் திகழ்கிறார். 70 மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட பல நோயாளிகள் கடந்த சில மாதங்களில் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ரோபோடிக் கார்டியாக் (இதய) அறுவை சிகிச்சை என்பது குறைந்த ஊடுருவல் முறையாகும். இது திறந்த இதய அறுவை சிகிச்சையை விட எளிதானது. இந்த நடைமுறையின் மூலம் நோயாளிகள் தங்கள் அன்றாட மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு விரைவாக திரும்ப முடியும். எங்கள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அதிக தொலைநோக்குப் பார்வை, துல்லியத் தன்மை, கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். மேலும் நோயாளிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத சூழல், அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் காயங்கள் குறைவாக இருப்பது, தொற்றுகள் ஏற்படாத நிலை, குறைவான வடுக்கள் போன்றவை ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையின் நன்மைகளாகும். அத்துடன் ரோபோடிக் உதவியுடனான அறுவை சிகிச்சை செயல்முறையை மேற்கொள்ளும்போது சுவாசம் மேம்படும். மருத்துவமனையில் குறைந்த அளவிலேயே தங்கி இருத்தல், விரைவான எழுந்து நடப்பது மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்புதல் போன்றவற்றால் நோயில் இருந்து
மீள்வது விரைவாக உள்ளது. நீரிழிவு நோயாளிகள் மற்றும் வயதான நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த அறுவை சிகிச்சை முறையாகும்.
அப்போலோ மருத்துவமனையின் இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர், (கார்டியோதொராகிக்) டாக்டர் எம்.எம். யூசுப், இதயத் மற்றும் அவரது குழுவினர் கடந்த சில மாதங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட பல நோயாளிகளுக்கும் 80 வயதுக்கு மேற்பட்ட 10 நோயாளிகளுக்கும் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர். தற்போது ரோபோட்டிக் உதவியுடனான சிஏபிஜி-க்கு உட்பட்ட நோயாளிக்கு 93 வயதாகிறது. இந்தியாவில் இன்றுவரை சிஏபிஜி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மூத்த நோயாளி இவரே ஆவார். பல இணை நோய்கள் கொண்ட வயதானவர்களுக்கு அதுவும், கோவிட் தொற்றுநோய்க் காலத்தின் போது ரோபோடிக் உதவியுடன் சிஏபிஜி சிகிச்சை செய்வது சிறந்ததாகும். சிகிச்சையளிப்பதற்கும் சிகிச்சைக்குப் பின் விரைவாக குணமடையச் செய்வதற்கும் இந்த நடைமுறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த நோயாளிகள் திறந்த முறை அறுவை சிகிச்சைக்கு ஏற்புடையவர்கள் அல்ல. ரோபோடிக் அறுவை சிகிச்சை முறை இல்லாவிட்டால் வேறு சிறந்த மற்றும் உறுதியான மாற்று சிகிச்சை முறைகள் இல்லாமல் போயிருக்கும்.
அப்போலோ மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். எம். யூசுப் Dr. (MM Yusuf, Consultant Cardiothoracic surgeon, Apollo Hospitals,) இந்த செயல்முறை குறித்துப் பேசுகையில், “மிகக்குறைந்த ஊடுருவல் இதய அறுவை சிகிச்சை மார்புப் பிளவு அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறது. மேலும் விரைவாக குணமடைய உதவுகிறது. ரோபோடிக் அசிஸ்டு சிஏபிஜி (CABG) என்பது இப்போது கிடைக்கக்கூடிய மிகக் குறைவான ஊடுருவல் முறை இதய அறுவை சிகிச்சை முறையாகும். இந்த அறுவை சிகிச்சையில் மார்பு குழியில் சிறிய துளைகளை உருவாக்கி அதன் மூலம் டாவின்சி ரோபோடிக் அமைப்பின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மார்புச் சுவரில் உள்ள 2 தமனிகள் பயன்படுத்தப்படுவதால் பெரும்பாலான நோயாளிகளுக்கு கால்களில் இருந்து எதுவும் எடுக்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. எனவே அவர்களுக்கு கால்களில் கத்தி வைத்து வெட்டி எடுக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை. மிகச் சிறிய அளவிலேயே இரத்த இழப்பு, குறைவான வலி மற்றும் விரைவாக குணமடைதல் ஆகியவை நோயாளிகளுக்கு சிறந்த வசதியை ஏற்படுத்துகிறது. இந்த ரோபோடிக் முறையில் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய காலம் வழக்கமாக 2 முதல் 3 நாட்கள் மட்டுமே. 2 அல்லது 3 வாரங்களில் நோயாளி முழு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். திறந்த முறையிலான சிஏபிஜி நடைமுறையில் முழு இயல்பு நிலை செயல்பாட்டிற்கு திரும்ப 2 அல்லது 3 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் கூட ஆகக் கூடும். இந்த தனித்துவமான ரோபோடிக் செயல்முறை உலகெங்கிலும் மிகச் சில மையங்களில் மட்டுமே செய்யப்படுகிறது.” என்றார்.
அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி (Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group) கூறுகையில், “எங்கள் நோயாளிகளின் நலனுக்காக உலகின் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தை உடனுக்குடன் அறிமுகப்படுத்துவதே எங்கள் நோக்கமாக உள்ளது. எங்கள் மருத்துவமனையின் அதிநவீன அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சையை அதிகமான மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அப்போலோ
மருத்துவமனைகளில், நாங்கள் மேற்கொள்ளும் எல்லா செயல்பாடுகளிலும் நோயாளிக்கு முதலிடம் கொடுத்து செயல்படுகிறோம். எளிதில் பயன் பெறக்கூடிய முறையில் எளிதில் மேற்கொள்ளக்கூடிய செலவில் உலகத்தரம் வாய்ந்த மிகச் சிறந்த சிகிச்சையை வழங்குகிறோம். இதுபோன்ற நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் பாரம்பரிய இதய அறுவை சிகிச்சை செய்ய முடியாத பல நபர்களின் வாழ்க்கையை மாற்றி அவர்களுக்கு சிறந்த வாழ்க்கை முறையை அமைத்துத் தரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.
ரோபோ உதவியுடனான சிஏபிஜி (Coronary Artery Bypass Graft – கரோனரி தமனி மாற்றுப்பாதை ஒட்டு) என்பது மிகக்குறைந்த ஊடுருவல் இதய அறுவை சிகிச்சைகளிலேயே மிகக் குறைவான ஊடுருவல் கொண்ட செயல் முறையாகும். இதில் ரத்த இழப்பு மற்றும் வலி மிகக் குறைவாகும். மருத்துவமனையில் தங்குவது மிகக் குறைந்த காலம் என்பதுடன் மிக விரைவாக குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். இந்த செயல்முறை ஒற்றை மற்றும் பல ரத்த நாள கரோனரி தமனி நோயால் (single and multi-vessel coronary artery disease) பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்றது. இதந் மூலம் நோயாளிகள் இரண்டு வாரங்களில் முழு இயல்பு நிலை செயல்பாடுகளுக்குத் திரும்பலாம்.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் பற்றி….:
சென்னையில் 1983-ம் ஆண்டு அப்போலோ மருத்துவமனை முதன்முதலாக டாக்டர் பிரதாப் ரெட்டியால் தோற்றுவிக்கப்பட்டது.
ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிக நம்பகமான மருத்துவ குழும்மாக அப்போலோ குழுமம் திகழ்கிறது. தற்போது 72 மருத்துவமனைகளில் 12000க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. 4500 மருந்தகங்கள், 120 ஆரம்ப சிகிச்சை மையங்கள் மற்றும் 700 பரிசோதனைக் கூடங்களும் உள்ளன. 500 க்கும் மேற்பட்ட தொலை மருத்துவ மையங்களும் உள்ளன. 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவையும் உள்ளன. இவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆய்வு நிறுவனத்தில் உலக அளவிலான மருத்துவ சேவை சோதனை முயற்சிகள், ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மரபணு ஆய்வு உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அப்போலோ மருத்துவமனை பல முன்னணி, நவீன மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்துவதில் முதலாவதாக திகழ்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆ,ஸ்ரேலிய பகுதிகளிலேயே முதலாவதான ப்ரோட்டான் சிகிச்சை மையத்தை சென்னையில் அப்போலோ மருத்துவமனை நிறுவியுள்ளது. ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. இந்திய அரசாங்கம் அப்போலோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் முறை. அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த 37 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதில் அப்போலோ முன்னணி வகிக்கிறது. அப்போலோ குழுமம் உலக மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் முன்னணி இடம் வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, www.apollohospital.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
டுவிட்டரில் பின்தொடர: @HospitalsApollo