காத்துவாக்குல ரெண்டு காதல் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.25 /5

நடிகர் நடிகைகள் :- விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, மாறன், கிங்ஸ்லி,
மற்றும் பலர்.

இயக்கம் :- விக்னேஷ் சிவன்.

ஒளிப்பதிவு :- எஸ்.ஆர். கதிர், விஜய் கார்த்திக் கண்ணன்.

படத்தொகுப்பு :- ஸ்ரீகர் பிரசாத்தின்.

இசை :- அனிருத்.

தயாரிப்பு :- ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்.

ரேட்டிங் :- 3.25 /5

தமிழ் திரைப்பட உலகில் வழக்கமாக ஒரு காதலன், ஒரு காதலி என அதிக திரைப்படங்கள் வந்திருக்கிறது அந்த திரைப்படங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில்
ஒரு காதலன், இரண்டு காதலி என வைத்து கலகலப்பாகவும் மிக அழகாகவும் ஒரு காதல் கதையைச் சொல்லலாம் என இயக்குனர் விக்னேஷ் சிவன் யோசித்திருப்பார் போலிருக்கிறது.

பகலில் ஒரு காதலி, இரவில் இன்னொரு காதலி என காதலிக்கும் ஒரு காதலனின் கதை.

கலகலப்பு கொஞ்சமாக இருந்தாலும் காதல் அதிகமாக இருக்கிறது.

ஆனால், ஸ்ட்ராங்கான திரைக்கதை அமைத்து அதில் கொஞ்சம் பாசம், அதிக காதல் சென்டிமென்ட் என கலந்து முடிவில்லாத காதல் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

கதாநாயகன் விஜய் சேதுபதி பிறந்ததிலிருந்து அதிர்ஷ்டம் இல்லாத துரதிஸ்டசாலியாக இருக்கிறார்.

இவர் வாழ்க்கையில் அனைத்துமே நேருக்கு மாறாக நடந்து வருகிறது.

இவர் பகலில் கால் டாக்ஸி கார் டிரைவராகவும் இரவில் கிளப்பில் பவுன்சராகவும் வேலை பார்த்து வருகிறார்.

கால் டாக்ஸி கார் டிரைவராக வேலை செய்யும் போது விநாயக சதுர்த்தி அன்று
கதாநாயகி நயன்தாராவையும், கிளப்பின் பவுன்சர் வேலை செய்யும் போது ஒரு நாள் இரவில் கதாநாயகி சமந்தாவையும் சந்திக்கிறார்.

இருவருடனும் காதல் மலருகிறது.

ஆனால், அவர் ஒரே நேரத்தில் இருவரைக் காதலிக்கிறார்.

சிறு வயதிலிருந்தே எதுவுமே கிடைக்காத அவருக்கு வாழ்க்கையில் ஒரே நேரத்தில் இரண்டு லட்டு ( காதலிகள்) கிடைத்தால் வேண்டாமென்றா கூறுவார் மறுக்காமல் இருவரையும் காதலித்துத் அசத்துகிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில் அவருடைய ‘ரெண்டு’ காதல் விவகாரம் இரண்டு கதாநாயகிகளுக்கும் தெரிய வருகிறது.

ஒரு கட்டத்தில் இந்த காதல் பிரச்சனையாக மாறுகிறது.

இறுதியில் கதாநாயகன் விஜய் சேதுபதி காதல் பிரச்சனையை எப்படி சமாளித்தார்? கதாநாயகி நயன்தாரா, கதாநாயகி சமந்தா இருவரில் யாருடன் காதலில் ஒன்று சேர்ந்தாரா?சேரவில்லையா? என்பதுதான் இந்த காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில்
கதாநாயகன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

ராம்போ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

காதலைக் கூட மிக கேஷுவலாகச் செய்கிறார் கதாநாயகன் விஜய் சேதுபதி.

சின்ன சின்ன அசைவுகள் மற்றும் முக பாவனைகளில் கூட அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

இந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா சமந்தா நடித்திருக்கிறார்கள்.

குடும்ப பெண்ணாக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கதாநாயகி நயன்தாரா.

மாடர்ன் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார் கதாநாயகி சமந்தா.

இரண்டு கதாநாயகிகள் என்றாலும் இருவருக்கு சரியான அளவில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் பிரபு, டான்ஸ் மாஸ்டர் கலா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்கள்.

மாறன், கிங்ஸ்லி ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

திரைப்படத்திற்கு பெரிய பலம் அனிருத்தின் இசை. பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.

பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

அனிருத் இசையில் ‘நான் பிழை…’ பாடல் மெலடியாய் ரசிக்க வைக்க ‘டூ டூ டூ’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது.

எஸ்.ஆர். கதிர், மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன். ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

இரவு நேர சென்னைக் காட்சிகள் புதிதாய் தெரிகிறது.

ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு அளவான வைத்து நிறைவான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.

இரண்டு காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இரண்டு காதல் வைத்து பார்ப்பவர்களை நெருடல் இல்லாமல் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

மொத்தத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இந்தக் கோடை வெயிலுக்கு ஏற்ற குளிர்காற்று.