பெஃப்சி முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக இன்று காலமானார்.
சென்னை 25 மே 2021பெஃப்சி முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக இன்று காலமானார்.
திரைப்படத் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினராகவும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர், பெப்சி திரைப்பட தொழிலாளர்கள் வீட்டு வசதி சங்கத்தின் தலைவர், அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்த முதல் தமிழர் என திரைப்படத் துறையின் பல்வேறு பதவிகளை வகிக்கும் மோகன் காந்திராமன்.
மோகன் காந்திராமன் அவர்கள் நாகர்கோவில் அருகே உள்ள ரவிபுதூர் தான் இவரின் சொந்த ஊர்.
மோகன் காந்திராமன் அவர்கள் பெரிய மிராசுதாரர் குடும்பத்தில் பிறந்த இவருடைய தந்தை ராமன்பிள்ளை மகாத்மா காந்தியின் மீதுள்ள பற்றின் காரணமாக காந்திராமன் என்று அழைக்கப்பட்டார்.
1934ல் மகாத்மா காந்திஜி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது மோகன் காந்தி ராமனின் தந்தை தனது குழந்தைக்கு ஒரு பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
அவருடைய தந்தை காந்திராமனின் குழந்தைக்கு மகாத்ம காந்தி அவர்கள் மோகன்தாஸ் என்று தன்னுடைய பெயரையே சூட்டினார்.
தமிழ் திரைப்படத்துறைக்கு தனது தந்தையின் பெயரை தனது பெயரில் சேர்த்து மோகன் காந்திராமன் என்று வைத்துக்கொண்டார்.
இந்தியா முழுவதும் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது வது அலை மிக் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்திலும் தொற்று பரவல் உச்சமடைந்து உள்ளதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனோ வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் பொதுமக்கள் திரைப்பட பிரபலங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றார்கள்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மோகன் காந்தி ராமன் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
மோகன் காந்திராமன் பற்றி
மோகன் காந்திராமன் எம்ஜிஆர் திரைப்படங்களில் இயக்குனர் நீலகண்டன் உதவியாளராக பணியாற்றியவர்.
கலைவாணர் என். எஸ். கே வால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பின்னல் சினிமாவுக்கு வந்தவர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த அரசியல் வாதியான ஜீவாவின் அண்ணன் மகன் தான் மோகன் காந்திராமன். கம்யூனிஸ்ட் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மோகன் காந்திராமன் சிறந்த தொழிற்சங்க வாதியாக இறுதி வரை நேர்மையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் .
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு சொந்தமாக அலுவலகம் இல்லாத நிலையில் அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவிடம் தற்போதைய சம்மேளனத்தின் அலுவலகம் இருக்கும் இடத்தை பெற்றுத்தந்தவர் மோகன் காந்திராமன்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக தமிழகத்தின் மூன்று முதல்வர்களிடம் பல்வேறு காலகட்டங்களில் தொழிலாளர்கள் பிரச்சனை சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டு தீர்வும் கண்டவர் மோகன் காந்திராமன்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் தற்போது இணைந்திருக்கும் சில சங்கங்கள் உருவாக காரணமாக இருந்தவர்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார் மோகன் காந்திராமன்.
இயக்குனர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட மோகன் காந்திராமன் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மறைந்த மோகன் காந்திராமன் அவர்கள் தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
1957-இல் வெளிவந்த சக்கரவர்த்தித் திருமகள் திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ப.நீலகண்டனிடம் உதவி இயக்குநராக முதன் முதலாக சேர்க்கப்பட்டார்.
இந்த திரைப்படம் வெற்றி திரைப்படமானது.
நல்லவன் வாழ்வான் திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் மட்டும் அல்லாமல் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணிபுரிந்திருக்கிறார்.
இந்த நல்லவன் வாழ்வான் திரைப்படத்தின் மூலம் கவிஞர் வாலி திரைப்பட துறைக்கு பாடலாசிரியராக அறிமுகம் செய்யப்பட்டார்.
‘சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்’ என்ற பாடல்தான் இவரது முதல் பாடல்.
ஆனந்த பைரவியில் ஆர்.ராமானுஜம் என்னும் புதிய இசை அமைப்பாளரை அறிமுகம் செய்து வைத்தவர் மோகன் காந்திராமன்.
ப.நீலகண்டனுடன் இணைந்து இவர் 18 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
அவற்றில் சில. சக்கரவர்த்தி திருமகள், திருடாதே, நல்லவன் வாழ்வான், கொடுத்து வைத்தவள், தேடி வந்த செல்வம், ஆடவந்த தெய்வம், ஆனந்தி, பூம்புகார், பூமாலை.
1994-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கில்லாடி மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் பாண்டியராஜனின் தந்தையாக மோகன் காந்திராமன் நடித்துள்ளார்.
இயக்குனர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் மோகன் காந்திராமன்
மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மோகன் காந்திராமனின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.