டாப்கன் மேவரிக் திரை விமர்சனம் ரேட்டிங் :- 4.25 / 5

நடிகர் நடிகைகள் :- டாம் க்ரூஸ், மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கோனெல்லி, ஜோன் ஹாம், க்லென் பாவெல், லீவிஸ் புல்மென், சார்லஸ் பார்னெல், பாஷீர் சலஹுதீன், மோனிகா பார்பரோ, ஜே எல்லீஸ், டானி ராமிரெஸ், க்ரெக் டார்சான் டேவிஸ், எட் ஹாரிஸ், வால் கில்மர், மற்றும் பலர்.

இயக்கம் :- ஜோசப் கோசின்ஸ்கி.

ஒளிப்பதிவு :- கிளாடியோ மிராண்டா.

படத்தொகுப்பு :- எடி ஹாமில்டன்.

இசை :- லோர்ன் பால்ஃப்.

தயாரிப்பு :- பாராமவுண்ட் பிக்சர்ஸ்.

ரேட்டிங் :- 4.25 / 5.

டோனி ஸ்கார் இயக்கத்தில், டாம் க்ரூஸ், கெல்லி மெக்கில்ஸ், வால் கில்மர் மற்றும் பலர் நடித்து 1986ஆம் ஆண்டில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம்தான் ‘டாப் கன்’.

ஜோசப் கோசின்ஸ்கி இயக்கத்தில் டாம் க்ரூஸ், மைல்ஸ் டெல்லர் ஜெனிபர் கான்னெலி மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 36 ஆண்டுகள் கழித்து வந்துள்ள திரைப்படம் தான் ‘டாப் கன் – மேவ்ரிக்’.

சன்டை காட்சிகள் மற்றும் சாகசங்களுக்கும் பேர் போன ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் கடந்த 1986 ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் டாப்கன்.

இந்த திரைப்படத்தின் இராண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் டாப்கன் மேவ்ரிக்.

திரைப்படத்தின் ஆரம்ப காட்சியிலே புதிய விமானம் ஒன்றை அநாசியமாக ஓட்டும் கதாநாயகன் டாம் க்ரூஸ் அந்த விமானத்தில கொடுக்கப் பட்டிருக்கும் லிமிட்டை தாண்டி அதனை அதிவேகமாக இருக்கிறார்.

இதனால் அந்தரந்திலேயே அந்த விமானம் வெடித்து சிதற அதற்கு தண்டனையாக அவர் டாப்கன் எனப்படும் போர் விமானிகளை இயக்கும் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்படுகிறார்.

அங்கு அவருக்கு அபாயகரமான இலக்கு ஒன்று கொடுக்கப்படுகிறது.

அதனை செய்து முடிக்க, அவருக்கு பயிற்சி பள்ளியில் இருக்கும் பெஸ்ட் பைலட்கள் கொடுக்கப்படுகிறார்கள்.

அதில் இறந்துபோன தனது நண்பனின் மகனும் இருக்கிறான்.

இந்த பைலட்களை வைத்து கதாநாயகன் டாம் க்ரூஸ் அவருக்கு கொடுக்கப்பட்ட இலக்கை செய்து முடித்தாரா இல்லையா என்பதுதான் இநத டாப் கன் மேவ்ரிக்கின் திரைப்படத்தின் மீதி கதை.

டாப்கன முதல் பக்கத்தில் கதாநாயகனாக டாம் க்ரூஸ் நடித்திருக்கிறார்.

தற்போது வெளியாகியிருக்கும் இந்த டாப்கன் மேவரிக் திரைப்படத்திலும் டாம் குரூஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

டாம் க்ரூஸ் திரைப்படம் என்றாலே அதிரடியான ஆக்ஷன் நிச்சயம் இருக்கும்.

டாப் கன்னில் இருந்த டாம் க்ரூஸின் சாகசம் டாப் கன் மேவ்ரிக்கிலும் தொடர்ந்திருக்கிறது.

Read Also  சேத்துமான் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.75 / 5

இந்த திரைப்படத்தில் இந்த ஆக்ஷன் அனைத்துமே அந்தரத்தில் மட்டுமே இருக்கிறது.

அதாவது வானில் போர் விமானங்களின் சாகசங்களாக இடம் பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்திற்காக போர் விமானங்களை ஓட்டவும் கேமராக்களை வைத்து படமெடுக்கவும் டாம் க்ரூஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிகைகள் படக்குழுவினர் சில மாதங்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

அதன் பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

திரைப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ஆகாயத்தில் மட்டுமே நடக்கிறது.

அதனால் இதில் ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டாவுக்கு எக்கச்சக்க வேலை இருந்திருக்கலாம்.

ஆனால் அதையெல்லாம் கனகச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டா.

அதே போல எடி ஹாமில்டனின் படத்தொகுப்பு  நம்மை ஃப்ரேம் ஃப்ரேம் பை ரசிக்க வைக்கிறது.

பிண்ணனி இசை பல இடங்களில் அபாரமாக வொர்க் அவுட் ஆகியிருந்தாலும், சில இடங்களில் அவற்றில் இருக்கும் குறை, காட்சிகளை ரசிக்கவைப்பதற்கு பதிலாக நெழிய வைத்து விடுகிறது.

முதல் பாகம் அப்படி இப்படி இருந்தாலும், இராண்டாம் பாகம் தி ஜெட் வேகத்தில் செல்கிறது.

குறிப்பாக கடைசி அரை மணி நேரம் சஸ்பென்ஸின் உச்சியில் உக்காரவைத்து விடுகிறது டாம் க்ரூஸ் மற்றும்  குழுவின் சாகசங்கள்  டாம் க்ரூஸ் சாகசங்களுக்காக டாப்கன் மேவ்ரிக்கை ரசிக்கலாம்.