அம்முச்சி 2 திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.5 / 5.
நடிகர் நடிகைகள் :- சின்னமணி, மித்ரா ரங்கராஜ்,சாவித்திரி, மீனா, தனம் சந்திரன், ஸ்ரீஜா, வைதீஸ்வரி, ரோகிணி நடராஜன், அருண் குமார், சசி செல்வராஜ், பிரசன்னா பாலச்சந்திரன், சந்திரகுமார், ராஜேஷ் பாலச்சந்திரன், மனோஜ் பீட்ஸ், தினேஷ் கே.ஆர், சிவன் மூர்த்தி, முத்தமிழ் AS, சஸ்தி பிரணேஷ், தினேஷ் குமார், விக்னேஷ்வர், செல்லா, சிக்கந்தர், அப்பா ரவி, மாணிக்கம், ராம்குமார், பிரபாகரன், மற்றும் பலர்.
இயக்கம் :- ராஜேஷ்வர் காளிசாமி.
ஒளிப்பதிவு :- சந்தோஷ் குமார் எஸ்.ஜே.
படத்தொகுப்பு :- கண்ணன் பாலு.
இசை :- விவேக் சரோ.
தயாரிப்பு :- எறும்புகல் நெட்வொர்க்.
ரேட்டிங் :- 3.5 / 5.
நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் சக்கைப்போடு போட்ட அம்முச்சி சீசன் 1 வெற்றியை தொடர்ந்து தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் அம்முச்சியின் இரண்டாவது சீசன் திரைப்படமாகவே வெளியாகி இருக்கிறது.
அதே கொங்கு மண்டல குழு இந்த படைப்பிலும் அசத்தி இருப்பதுடன் யூடியூப் நேர்த்தியை தாண்டி திரைப்பட நேர்த்தியையும் கொண்டிருப்பது நல்ல ஒரு வளர்ச்சி.
கதாநாயகன் அருண் வேலை வெட்டி இல்லாமல் பொழுது போக்கிக் கொண்டு நேரம் கெட்ட நேரத்தில் அம்முச்சி ஊரிலிருக்கும் காதலிக்கு போன் போட்டு டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்.
கதாநாயகன் அருண் தனது பாட்டி ஊருக்கு செல்கிறான், அங்கு கதாநாயகி மித்ரா பார்த்து காதலில் விழுகிறான்.
சில நாளில் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பிக்கிறனர்.
கதாநாயகி மித்ராவிற்கு இந்த கிராமத்தை விட்டு கல்லூரிககு சென்று நன்றாக படிக்க வேண்டும் என் ஆசை.
ஆனால் அதில் அவளுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது.
கதாநாயகி மித்ராவின் குடிகார தந்தைக்கு அவர் சொல்லும் நபரை தான் கதாநாயகி திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்.
கதாநாயகி மித்ரா கல்லூரி செல்லும் கனவும் தகர்ந்து போக கதாநாயகன் அருணுக்கு போனை போட்டு கல்லூரிக்கு செல்ல முடியாத விஷயத்தை கதாநாயகன் அருணிடம் கூறுகிறார்.
கல்வியை காப்பாற்றுவதற்காகவும் தனது காதலி கதாநாயகி மித்ராவின் கனவை நிறைவேற்றுவதற்காகவும்
தனது அம்மாவிடம் கோவா நண்பர்களுடன் செல்கிறேன் எனக்கூறிவிட்டு கோடாங்கி பாளையம் கதாநாயகி மித்ராவை காண்பதற்காக கதாநாயகன் அருண் செல்கிறார்.
இறுதியில் கதாநாயகன், அந்த குடிகார தந்தையை சமாளித்தாரா? இல்லையா? கதாநாயகி மித்ராவின் கல்லூரி ஆசை நிறைவேறுகிறதா? இல்லையா? என்பதுதான் அம்முச்சி சிசன் 2 மீதி கதை.
கதாநாயகனாக அருண்குமார் மிக அருமையாகவும் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக மித்ரா அருமையாக நடித்திருக்கிறார்.
கதாநாயகனின் நண்பன் சசி வில்லனாக வரும் ராஜேஷ் பாலசந்திரன், கதாநாயகனின் அம்மா தனம், பிரசன்னாவின் மனைவியாக வரும் சாவித்திரி உள்ளிட்ட அனைவருமே கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்கள்.
அம்முச்சியாக நடித்திருக்கும் சின்னமணி அம்மாளின் தோற்றமும் அவருடைய உரையாடல்களும் சிலிர்க்க வைக்கின்றன.
பிரசன்னா பாலசந்திரனுக்கு இது பொற்காலம் போலும். தமிழின் ஆகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக வந்திருக்கும் சேத்துமான், இந்தத் தொடர் அதன்பின் சுழல் தொடர் என்று எங்கு பார்த்தாலும் அவர் இருக்கிறார்.
சிறந்த நடிப்பில் நம்மைக் கவர்ந்திழுக்கிறார்.
பிரசன்னா பாலசந்திரனுக்கு மனைவிக்கும் இருவருக்கும் காட்சிகள் அருமை.
மற்ற அனைத்து காட்சிகளிலும் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் அனைவரிடமும் மிகவும் அருமையாக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி மிக அருமையாக
வேலை வாங்கியிருக்கிறார.
இந்த அம்முச்சி தொடரை இயக்கியிருக்கும் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
ஒரு வட்டார வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருப்பது இயக்குனரின் பலம்.
கதாநாயகன் அருண், கதாநாயகி மித்ரா காதல் காட்சிகள் ஒரு சில காட்சிகள்தான் என்றாலும் மிகவும் அருமையாக இருக்கிறது.
சந்தோஷ்குமார் எஸ்.ஜே வின் ஒளிப்பதிவு கொங்குவட்டார கிராமத்தின் அழகை அப்படியே மிகவும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
விவேக் சரோவின் இசை காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒரு கிராமத்துப் பெண் உயர்கல்வி படிப்பதில் உள்ள சிக்கல்களைச் சொல்லியிருப்பதும் மிகவும் இயல்பானது.
கல்லூரி விண்ணப்பப் படிவத்தில் டாக்டர் அனிதா கல்லூரி என்று வைத்திருப்பதும் மிக சிறப்பு.
கிளைமாக்சில் பெண் கல்வியை முன்னிலை படுத்துவதைக் கைத்தட்டி வரவேற்கலாம்.
மொத்தத்தில் அம்முச்சி சிசன் 2 அருமை இன்னும் பல சிசன்கள் எதிர்பார்க்கலாம்..!