நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் “பாயும் ஒளி நீ எனக்கு” படத்தின் டீசர் 27 ஜூன் 2022 அன்று வெளியிடப்படுகிறது.

சென்னை 25 ஜூன் 2022 நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் “பாயும் ஒளி நீ எனக்கு” படத்தின் டீசர் 27 ஜூன் 2022 அன்று வெளியிடப்படுகிறது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் தயாராகியிருக்கும் “பாயும் ஒளி நீ எனக்கு” படத்தின் டீசர் 27.06.2022 அன்று வெளியாகிறது.

கார்த்திக் மூவி ஹவுஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் அத்வித் தயாரித்திருக்கும் திரைப்படம் “பாயும் ஒளி நீ எனக்கு”.

இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படத்தில் கதையின் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் கன்னட நடிகர் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாகர் இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று 2 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.

டாணாக்காரனின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் பிரபுவின் அடுத்த படமான பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரசிகர்களின் ஆர்வத்தை தொடர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் டீசர் வெளியாகிறது.