ஒ 2 திரை விமர்சனம் ரேட்டிங் :- 2.75 / 5.
நடிகர் நடிகைகள் :- நயன்தாரா, மாஸ்டர் ரித்விக், பரத் நீலகண்டன், கருணை ராஜா, ஆர்.என்.ஆர் மனோகர், ஜாஃபர் இடுக்கி ஆடுகளம் முருகதாஸ், சிவா ஷரத், மற்றும் பலர்.
இயக்கம் :- ஜி.எஸ்.விக்னேஷ்.
ஒளிப்பதிவு :- தமிழ் ஏ அழகன்.
படத்தொகுப்பு :- செல்வா ஆர்.கே..
இசை :- விஷால் சந்திரசேகர்.
தயாரிப்பு :- ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.
ரேட்டிங் :- 2.75 / 5.
குறும்படம் போலவும் இல்லாமல் திரைப்படம் போலவும் இல்லாமல் இருக்கும் சில திரைப்படங்கள்தான் ஓடிடி தளங்களில் அதிகமாக வெளிவருகிறது.
அப்படி வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் இந்த ‘ஓ 2’.
கணவனை இழந்த இளம் விதவை கதாநாயகி நயன்தாராவின் மகன் ரித்விக்கிற்கு
நுரையீரலில் சுவாச குழாய் பாதிப்பால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் மூலம்தான் மகன் சுவாசிக்க முடியும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான்..
தனது மகன் மேல் சிகிச்சைக்காக கோயமுத்தூரில் இருந்து ஆம்னி பேருந்து மூலம் கொச்சினுக்கு
செல்கிறார்.
கொச்சின் செல்லும் வழியில் ஆம்னி பேருந்து கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து சிக்கிக் கொள்கிறது.
கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட ஆம்னி பேருந்தில் கதாநாயகி நயன்தாரா தனது குழந்தை ரித்விக் காவல்துறை அதிகாரி, முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் எம்எல்ஏவின் உதவியாளர் காதலர்கள், பேருந்து ஓட்டுனர் உள்ளிட்ட 9 பேர் சிக்கிக் கொள்கிறார்கள்.
இறுதியில் நிலச்சரிவில் மாட்டிக்கொண்ட ஆம்னி பேருந்தில் சிக்கிக் கொண்டவர்கள் அனைவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த ஒ2 திரைப்படத்தின் மீதிக்கதை.
திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.
கோபம், அக்கறை, பாசம், பரிதவிப்பு உள்ளிட்ட உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார் கதாநாயகி நயன்தாரா.
குறிப்பாக தனது மகனுக்காக ஏங்கும் காட்சிகளில் மனதை உருக வைக்கிறார்.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதையும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் கதாநாயகி நயன்தாரா எப்போதுமே கவனமாக இருப்பார்.
இந்த திரைப்படத்தின் கதையையும், கதாபாத்திரத்தையும் கேட்டதுமே தனக்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார் கதாநாயகி நயன்தாரா.
ஆனால், அவரது எதிர்பார்ப்பை இயக்குனர் பூர்த்தி செய்யாமல் விட்டுவிட்டார்.
கதாநாயகி நயன்தாராவின் மகனாக நடித்திருக்கும் ரித்விக், முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்
கதாநாயகி நயன்தாராவின் மகனாக யு டியூப் புகழ் ரித்விக் மீது அனுதாபம் ஏற்படும் ஒரு கதாபாத்திரம். முதல் திரைப்படம் என்று சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார் ரித்விக்.
ஆம்னி பேருந்துக்குள் லைட் போடும் காட்சியில் படபட வைக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைத்திருக்கிறார் ரித்விக்.
ஆம்னி பேருந்து ஓட்டுனர் ஆடுகளம் முருகதாஸ், முன்னாள் எம் எல் ஏ, ஆர்.என.ஆர். மனோகர் காதலர்கள் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.
காவல்துறை அதிகாரியாக வருபவர் மிகக்கொடூரமான வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
எப்படியாவது தப்பிக்க வேண்டும் என கொஞ்ச நேரம் ரவுடியாக மாறிவிடுகிறார் காவல்துறை அதிகாரி.
மற்ற கதாபாத்திரங்களுக்கு தேவையான அளவு காட்சிகளைக் கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ்
நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பேருந்து, ஆக்சிஜனுக்காக போராடும் மனிதர்கள், தாய் மகன் பாசம், இயற்கை வளங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ்.
ஒரே ஒரு ஆம்னி பேருந்தில் பயணிக்கும் கதை. பேருந்தை செட்டாக அமைத்துத்தான் படமாக்கியிருப்பார்கள்.
அந்த செட்டை வடிவமைத்த கலை இயக்குனர், அதற்குள்ளேயே பல கோணங்களில் காட்சியமைத்த ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகன். பாராட்டுக் குரியவர்கள்.
ஆம்னி பேருந்துக்குள் இருக்கும் நிறைய காட்சிகள் திக் திக் நிமிடங்களாக கொடுத்திருக்கிறார்.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், தமிழ் ஏ.அழகனின் ஒளிப்பதிவும் திரைப்படத்திற்கு மிக பெரிய பலம்
மொத்தத்தில் ‘O 2’ திரைப்படம் அவசியம் தேவை.